உணவு ஆரோக்கியத்தின் அடிப்படை என்றாலும் நாவுக்கு ருசியாக சாப்பிடுவதற்கு அனைவருக்கும் பிடிக்கும். எனவே அவ்வப்போது உணவகங்களில் இருந்து ஆர்டர் செய்து உண்ணும் வழக்கம் அதிகமாகிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிலும், புகழ்பெற்ற ஹோட்டல்களின் சிறப்பு உணவுகளை வாங்கி சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர். இதில் தவறும் இல்லை. ஆனால் பாவம் ஒரு பெண் ஏன் வெளியில் இருந்து உணவு ஆர்டர் செய்தோம் என்று நொந்து நூலாகும் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகிறது.


இங்கிலாந்தில் உள்ள ஒரு பெண் புகழ்பெற்ற Dominos பீட்சாக் கடையில் பீட்சா ஆர்டர் செய்தார். ஆனால், அவர் எதிர்பார்க்காத டாப்பிங்குடன் பீஸ்ஸா வந்தது. உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மிகவும் பிடித்த உணவு, பிரபலமான உணவு எது என்றால் பீட்சா தான்.


READ ALSO | முதன்முறையாக இந்திய உணவை சாப்பிட்ட நைஜீரியரின் வீடியோ வைரல்


சிக்கன் பீஸ்ஸா, பெப்பரோனி பீஸ்ஸா அல்லது சீஸ் பீட்சா என எதுவாக இருந்தாலும், பொதுவாக அனைவருக்கும் பீட்சா பிடிக்கும்.
 
இங்கிலாந்தின் லங்காஷயரில் வசிக்கும் ஜெம்மா பார்டன், டோமினோவில் இருந்து பீட்சாவை ஆர்டர் செய்த கதையை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார், அவருக்கு வந்த பீட்சாவில் நட்டும் போல்டும் டாப்ப்பிங்காக இருந்தது. 


இந்த ‘ஸ்பெஷல்’ பீட்ஸாவின் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட அந்த பெண், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாததற்காக டொமினோவை குறைசொன்னார்.



"டொமினோஸில் நான் செய்த ஆர்டரை பெற்றுக் கொண்டு ஆசையுடன் அதை திறந்து சாப்பிட்டேன். ஆனால் பாதி சாப்பிட்ட பிறகு தான் அதிர்ச்சியடைந்தேன். நான் எப்படி அதை சாப்பிட்டேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. டொமினோஸில் தரச் சோதனை செய்கிறார்களா!


இனிமேல் தயவுசெய்து சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் பீட்சாக்களை இருமுறை சரிபார்க்கவும். இல்லாவிட்டால் நான் இப்போது பீட்சாவை வெறுப்பது போன்ற அனுபவம் உங்களுக்கும் ஏற்படலாம். 


டொமினோஸின், ஃப்ளீட்வுட் ஆர்ட் நோர்த் தோர்ன்டன்-கிளீவ்லீஸ் கிளையில் (Thornton-Cleveleys branch on Fleetwood Rd North) ஆர்டர் செய்யும் போது கவனமாக இருங்கள்.


READ ALSO | விண்வெளியில் பீட்சா சாப்பிடும் விண்வெளி வீரர்கள்; வீடியோ வைரல்


இந்த பதிவும், புகைப்படமும் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அன்னாசிப்பழம் மோசமானது என்று நினைத்து மறையை வைத்து விட்டார்களோ என்று ஒருவர் கிண்டலடிக்கிறார்.நெட்டிசன்களின் நக்கல் நையாண்டிகளுக்கு மத்தியில் டோமினோஸ் மன்னிப்பு கேட்டுக் கொண்டது. 


"டொமினோவில், நாங்கள் வாடிக்கையாளர் திருப்தியையும் பாதுகாப்பையும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். ஜூலையில் திருமதி பார்டனின் புகார் கிடைத்தவுடன் நாங்கள் மன்னிப்பு கேட்டோம். எங்கள் கிளை உணவகத்தின் மட்டத்தில் ஏற்பட்ட தவறுக்காக மன்னிப்புக் கேட்கிறோம். அதை முழுமையாக ஆராய்ந்ததற்காகவும். திருமதி பார்டனுக்கு அந்த நேரத்தில் அவர் ஏற்றுக்கொண்ட முழு பணத்தைத் திரும்ப வழங்கினோம். இதுபோன்ற தவறு எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதையும், தவறுகளை தவிர்ப்பதற்கான சரியான செயல்முறையை அறிவுறுத்தியிருக்கிறோம்" என்று டொமினோ உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.


Also Read | இன்ஸ்டாகிராமில் ஜோதிகா என்ட்ரி: முதல் போஸ்ட்டே அட்டகாசம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR