ஜப்பானின் டோட்டோரி மாகாணத்தின் கடற்கரை நகரமான டெய்சனில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நகரம் நடந்த ஒரு சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இதனால் வேற்றுகிரகவாசிகளும் அவர்கள் பூமிக்கு வருவது குறித்தும் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் டெய்சனில் வசிப்பவர்கள் வானத்தில்  கண்ட சில காட்சிகளை பார்த்து திகைத்து போயினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வானத்தில் படர்ந்திருக்கும் பளபளப்பான தூண்களின் படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றன (Viral News). இந்தப் படங்களை உன்னிப்பாகப் பார்த்தால், ஒரு அறிவியல் புனைகதை படத்தின் காட்சிகளின் நினைவுகள் உங்கள் மனதில் தோன்றும்.


ஜாப்பானில் வானில் தோன்றியது தொடர்பான வைரல் படங்களை பார்க்கும்போது, ​​வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து விட்டார்களோ ஒருமுறை தோன்றும், ஆனால் இந்த படங்களின் உண்மை நிலை மிகவும் வித்தியாசமானது. ஆரம்பத்தில் இந்த சம்பவம் ஏலியன் தாக்குதல் என்று கூறப்பட்டது. ஆனால் இந்த சம்பவத்திற்கு காரணம் இசரிபி கொச்சு என்ற இயற்கை ஒளி.


வேற்றுகிரகவாசி (Isaribi Kochu) என்பது ஒரு இயற்கை ஒளி காட்சி என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது முக்கியமாக ஜப்பானின் கடலோரப் பகுதிகளில் நிகழ்கிறது. ஜப்பான் டுடேயில் வெளியான செய்தியில், இரவில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீன்களை ஈர்க்கும் வகையில் "இசாரிபி" எனப்படும் பிரகாசமான விளக்குகளைப் பயன்படுத்தும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


மேலும் படிக்க | கல்லறையில் இருந்து வந்த குரல்.... பூமியில் புதைக்கப்பட்டவரை உயிருடன் மீட்ட அதிசயம்..!!


சில வளிமண்டல நிலைமைகளின் கீழ், இந்த விளக்குகள் செங்குத்து ஒளி தூண்களை போல் பிரதிபலிக்கின்றன. பனிக்கட்டி படிகங்கள் காற்றில் இருக்கும்போது இது பொதுவாக நிகழ்கிறது. வளிமண்டலத்தில் தெளிவான வானிலை, குறைந்த வெப்பநிலை மற்றும் பனி படிகங்கள் ஆகியவற்றின் கலவையானது இந்த அரிய நிகழ்வைக் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கலவை நிகழும்போது, ​​​​உருவாக்கும் காட்சி வசீகரிக்கும்.


 



 


பார்க்கும் எவரும் வியக்கும் அளவுக்கு இது அழகாக இருக்கும். டெய்சனில் கடலுக்கு அருகில் நடந்த இந்த சம்பவம், மனித செயல்பாடுகளுக்கும் இயற்கை சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கும் இடையிலான கலவை. அது பல வழிகளில் இயற்கைக்கு அப்பாற்பட்டது மட்டுமல்ல, வேறு உலகம் இருக்கிறதோ என நம்மை நினைக்க வைக்கும். அதைப் பார்க்கும்போதும் இயற்கையின் அதிசயங்களை நமக்கு என்பதை உணர்த்துகிறது என்று சொல்லலாம். 


மேலும் படிக்க | Viral Video: பாசக்கார பய போலிருக்கு.... புறாவுக்காக வாயை கொடுத்த ‘பாரி’ வள்ளல்...!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ