உ.பி.யில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற உருவபொம்மையை திருமணம் செய்த மகன்
உத்தரப்பிரதேசத்தில் (UP ) பிரயாகராஜில் (Prayagraj) ஒரு விசித்திரமான திருமணம் (Bizarre Wedding) நடந்தது. ஒரு பையன் ஒரு பெண்ணுக்கு பதிலாக மர உருவபொம்மையை மணந்தார். திருமண புகைப்படங்கள் மிகவும் வைரலாகி (Viral Photos) வருகின்றன
பிரயாகராஜ்: ஒரு நபர் தனது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற நேற்று (வியாழக்கிழமை) உத்தரபிரதேசத்தில் (Uttar Pradesh) மர உருவத்தை திருமணம் (Man Marries Wooden Effigy) செய்துக்கொண்டார். இந்த சம்பவம் குறித்த செய்தி சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாகி (Viral) வருகிறது. இது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிரயாகராஜ் (Prayagraj) மாவட்டத்தின் குர்பூரில் நடந்த இந்த வினோதமான (Bizarre Wedding) திருமணத்தில் அனைத்து சடங்குகளுடன் முறையாக நடந்தது. உருவ பொம்மையை மணமகள் போல அழகாக அலங்கரிக்கப்பட்டது. அதன் அருகில் அமர்ந்து உருவ பொம்மையை திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணம் வினோதமானது என்பது மட்டுமல்ல, சிவ் மோகன் (Shiv Mohan) தனது மகனை இந்த பாணியில் திருமணம் (Wedding) செய்துவைக்க அவர் கூறிய காரணங்களும் வினோதமாக தான் இருக்கிறது.
அவர் கூறியது "எனக்கு ஒன்பது மகன்கள் உள்ளனர். அவர்களில் எட்டு பேர் திருமணமானவர்கள். என் 9வது மகனுக்கு சொத்து இல்லை. அவன் புத்திசாலியும் இல்லை. எனவே நான் எனது மகனை ஒரு உருவ பொம்மையையுடன் திருமணம் செய்து வைத்தேன்" என்று சிவன் மோகன் கூறினார். இதை மணமகனின் தந்தை ANI செய்தி ஊடகத்திடம் பேசும்போது கூறினார்.
இந்த செய்தியும் படிக்கவும் | பாம்பின் மீது சவாரி செய்யும் தவளை; இணையத்தில் வைரலாகும் வீடியோ!
மிகவும் எளிமையாக நடைபெற்ற இந்த திருமணத்தில் ஒரு சில உறவினர்களும் கலந்து கொண்டனர்.