மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட BJP & காங்கிரஸ் ட்விட்டர் போர்....!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பி.ஜே.பி & காங்கிரஸ் நடத்திய ட்விட்டர் போரை கலாய்த்து இணையத்தில் நெட்டிசங்கள் பல்வேறு மீம்ஸ்-கை பதிவிட்டு வருகின்றனர்...!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பி.ஜே.பி & காங்கிரஸ் நடத்திய ட்விட்டர் போரை கலாய்த்து இணையத்தில் நெட்டிசங்கள் பல்வேறு மீம்ஸ்-கை பதிவிட்டு வருகின்றனர்...!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பாரதிய ஜனதாக் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான இன்போ கிராபிக்ஸ் விகிதாச்சார வரைபடம் ஒன்றை பதிவிட்டது. அதில், 2004 - 2009 இடைப்பட்ட ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை 75.8 சதவிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2014-18 இடையிலான பி.ஜே.பி ஆட்சியில் 13 சதவிகிதம் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, BJP -யின் இந்தத் தகவலுக்கு அதேபாணியில் காங்கிரஸ் கட்சி மற்றொரு இன்ஃபோகிராப் வரைப்படம் மூலம் பதிலடி கொடுத்தது. அதில், பெட்ரோல் விலை உயர்வையும், அதே காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரங்களையும் ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. எங்களது ஆட்சிக் காலத்தில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்ததால், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினோம்.
ஆனால், தற்போதைய ஆட்சிக் காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 34 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இப்படி இரு தரப்பினரும் மாற்றி மாற்றி படங்களை ட்விட்டர் பக்கத்தில் படங்களை பதிவிட்டு பெரும் போரை நடத்தினர். நமது மக்களுக்கு ஒரு சிறு துரும்பு கிடைத்தால் போதும் அதை எவ்வளவு பெரிதாக்கி வெடிக்க வைக்க முடியுமோ அவ்வளவு பெரிதாக்கி விடுவார்கள். அதில் ஒருவர் தான் இந்த மீம்ஸ் க்ரியேட்டர்கள்.
இந்த இரு கட்சியினரும் வெளியிட்டிருந்த இன்போ கிராபிக்ஸ் விகிதாச்சார வரைபடத்தை வைத்து நெட்டிசங்கள் பலரும் பல்வேறு மீம்ஸ்-களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். நெட்டிசன்களை தவிர இரு கட்சியனரும் அந்த வரைபடங்களை வைத்து விவாதித்து வருகின்றனர். மொத்தத்தில், பெரும் வாக்குவாதத்தை ஏற்படுத்தி வருகிறது இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!
காங்கிரசும் கூட பி.ஜே.பி யில் தோற்றமளித்தது, 'நிலையான'வரைபடம். பின்னர், 2019 பொதுத் தேர்தல்களுக்கு மேல் முறையீடு செய்ய காங்கிரஸ் வாய்ப்பைப் பயன்படுத்தியது.