பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே படையே நடுங்கும். அதிலும் கருநாகம் என்பது மிகவும் ஆபத்தான, அதிக விஷம் கொண்ட பாம்பாக கருதப்படுகிறது. இருப்பினும், பாம்பை அச்சமில்லாமல் எதிர் கொண்டு தாக்கும் விலங்குகளும் இருக்கத் தான் செய்கின்றன. சில விலங்குகள் பாம்புகளை தங்களுக்கு இரையாக ஆக்குகின்றன. அதில் முக்கியமான ஒன்று கீரி. கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளது என கூறப்படுகிறது. எனவே, பாம்பு கொத்தினால், கீரியின் உடலில் காயங்கள் தான் ஏற்படுமே தவிர, அது சாகாது என்று கூறுவார்கள். பாம்பு கீரி சண்டையில், பெரும்பாலும் பாம்பை கீரி கொன்றுவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பு படம் எடுத்து கீரியை தாக்கி களைத்துப் போன பின்னர், சோர்வாக உள்ள பாம்பின் தலையை கடித்து கீரி கொன்றுவிடும். கீரி குட்டையான கால்களைக் கொண்ட ஒரு சிறிய விலங்கு என்றாலும், பாம்பை கண்டால் மூர்க்கமாக தாக்கும் தன்மை கொண்டது. பார்த்தாலே அச்சத்தை கொடுக்கும் கரு நாகம் உலகின் மிக விஷ பாம்புகளில் ஒன்றாகும். ஆனால், கீரி அதனை மிக மூர்க்கமாக தாக்கும் திறன் கொண்டது. இந்நிலையில் பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான ஆக்கிரோஷமான சண்டை தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | Viral Video: பின்னிப் பிணையும் மூன்று பாம்புகள்; காதலா.. இல்லை குரோதமா!


வைரல் வீடியோவை இங்கே காணலாம்:



நாகப்பாம்புடன் போடும் சண்டையில் பெரும்பாலும், கீரி தான் வெற்றி பெறும். சிறிது அரிதாகவே பாம்பு வெற்றி பெறும். எனினும் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் காணொளியில், மிக உக்கிரமாக சண்டையிடும் கீரி இறுதியில் பாம்பின் தலையை குதறி தின்று விடுகிறது. வைரல் வீடியோவில், கருநாகம் ஒன்றை கீரி ஆக்கிரோஷத்துடன் கடித்து குதறுவதைக் காணலாம். கீரியை நேருக்கு மோதும் நாகமும் விடாமல் உக்கிரத்துடன் சண்டையிடுகிறது. ஆனால் இறுதியில் கீர் பாம்பின் தலையை கடித்து குதறி விடுகிறது. பாம்பு கீரி இடையிலான இந்த சண்டை வீடியோ, மிகவும் திகிலூட்டுவதாகவே உள்ளது. 


மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களுக்குள் நடந்த குடும்ப சண்டை... சைக்கிள் கேப்பில் தப்பிய எருமை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ