இன்றைய வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் குழந்தைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடன வீடியோக்களுக்கு இணையத்தில் ஒரு தனி மவுசு உள்ளது. பலர் தங்களது அற்புதமான நடனங்களை இணையத்தில் போஸ்ட் செய்வது உண்டு. சிலர் பிறர் ஆடும் நடனத்தை ரெகார்ட் செய்து பகிர்கிறார்கள். இணையவாசிகளுக்கு பிடித்தமான குழந்தைகளும் நடனமும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும். இவற்றை ஒன்று சேர்த்த ஒரு வீடியோதான் தற்பொது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. 


மேலும் படிக்க | மனதை மயக்கும் இயற்கையின் வண்ணங்கள்! பார்க்க பார்க்க வியப்பூட்டும் நீரூற்று! வீடியோ வைரல்


அந்த வகையில் நேற்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக இந்த படத்தில் இடம்பெற்ற "காவாலா" பாடல் செம வைரலானது. பாடல் வெளியான முதல் தற்போது வரை இந்த பாடலுக்கு நாளுக்கு நாள் மவுசு எறிக்கொண்டே தான் இருக்கிறது. இதில் நடிகை தமன்னா சிறப்பாக நடனமாடியுள்ளார். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் பள்ளி மாணவர்கள் சிலர் நடனமாடிவதை நாம் காணலாம்.


மாணவர்களின் அற்புதமான நடனம்...
இந்த வைரல் கிளிப்பை இன்ஸ்டாகிராமில் (@balramrj143) என்ற கணக்கில் பதிவிட்டப்பட்டுள்ளது. இதில் ‘Vaa Nu Kavalaya’ பாடலுக்கு மாணவர்கள் நடனமாடுகிறார்கள். பள்ளி மைதானத்தில் மாணவர்கள் நிற்பதை கிளிப்பில் காணலாம். மேலும் இந்த மாணவர்கள் நீல நிற சட்டை மற்றும் பழுப்பு நிற பேன்ட் அணிந்துள்ளனர். பின்னர் அனைவரும் சேர்ந்து காவாலையா பாடலில் நடனமாடத் தொடங்குகின்றனர். ஆனால் இவர்களுக்கு மத்தியில் ஒரு கியூட்டான  மாணவன் அசைவுகள் பார்ப்பதற்கே கியூட்டாக் இருக்கிறது. அப்படியே தமன்னா இந்த படாலில் எப்படி ஆடியுள்ளாரோ அதேபோல இந்த மாணவன் ஆடுகிறார்.


மாணவனின் நடன வீடியோவை இங்கே காணுங்கள்:



ஐந்து நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த வீடியோவுக்கு தற்போது வரை 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெகுவாக வைரலாகி வருகிறது. 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | வேட்டைக்கு வந்த கருநாகத்தை தலையில் அடித்து கதறவிட்ட பூனை: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ