வைரல் வீடியோ: இந்தியாவில் நடக்கும் திருமணங்களில் பெரும்பாலும் வேடிக்கையான மற்றும் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறுவது உண்டு. அதிலும் குறிப்பாக திருமண நிகழ்சியில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒரே உற்சாகமாக இருக்கும். திருமணத்திற்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் உட்பட பலர் நடனம் ஆடி மகிழ்வார்கள். அதேவேளையில், மணமகனும், மணமகளும் வெட்கத்துடன் மேடையில் அமர்ந்திருப்பார்கள். ஆனால் அந்த காலம் போய்விட்டது. இப்போதெல்லாம், தம்பதிகளும் ஒருவருக்கொருவர் நடனமாடுகிறார்கள். அத்தகைய ஒரு நடன வீடியோ வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாலி கட்டிய பிறகு, மணமகனும், மணமகளும் நடுரோட்டில் மிகவும் உற்சாகமாக நடனமாடுகிறார்கள். புதுமணத் தம்பதியினர் இருவரும் ஒன்றாக, மேள தாளத்துடன் உற்சாகமாக நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்போது அங்கு இருப்பவர்கள் மிகவும் ரசிக்கிறார்கள். 


ALSO READ | Viral Video: அனைவருக்கும் முன்னால் மணப்பெண்ணுக்கு நடந்த சம்பவம்!


இன்ஸ்டாகிராம் பக்கத்தில் official_niranjanm87 என்பவர் இது போன்ற திருமண வீடியோக்களை பகிர்ந்துள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது. அவர் தனது பதிவில், "யார் யாரெல்லாம் தங்கள் திருமணத்தில் இதுபோன்று நடனம் ஆடினீர்கள்' என்ற கேள்வியோடு வீடியோவை பதிவிட்டுள்ளார்.


 



இந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் மக்கள் வீடியோவை விரும்புகிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால், தம்பதியினர் எந்தவித வெட்கமும், கவலையும் இல்லாமல் சந்தோசமாகவும் உற்சாகமாகவும் நடனமாடினர் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் மிகவும் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவித்தனர். இந்த ஜோடிக்கு மக்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.


ALSO READ | கல்யாணம் முடிந்தவுடன் மாப்பிள்ளை செய்த செயல்.. வாய் பிளந்த மற்றவர்கள் -Video


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR