வைரல் வீடியோ: இந்து முறைப்படி நடக்கும் திருமண சடங்குகளில் ஒன்று மணமகள் மணமகனின் கால்களைத் தொட்டு வணங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் பலர் இந்த சடங்கை விமர்சித்து வருகின்றனர். இது பெண்ணை அடிமை படுத்ததல் என்றும், ஆண், பெண் இருவரும் சமம் என்றும், இதுபோன்ற சடங்குகள் தேவையா? இது ஒருதரப்பை அடிமைப்படுத்தும் சம்வம். பெண் மட்டும் ஏன் தனது கணவரின் காலைத் தொட்டு தலைவணங்க வேண்டும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆனால், காலம் மாறிக்கொண்டிருக்கிறது மற்றும் பல தம்பதிகள் இப்போது இந்த பழமையான சடங்கை தங்கள் பாணிக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைத்து கடைபிடித்து வருகின்றனர். பெண்கள் மட்டும் தான் காலில் விழ வேண்டுமா? ஆண்கள் விழுந்தால் என்ன என்று கேள்வி கேட்டவர்களும் உண்டு. இருவரும் சமம் என உணர்த்தும் வகையில், தற்போது ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆணும், பெண்ணும் சமம், இருவரும் பரஸ்பர மரியாதை அளிக்க வ்நெடும் என்பதற்கு சிறந்த உதாரணமாக திருமண விழாவில் நிகழ்ந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
ALSO READ | Viral Video: கள்ளக்காதலியுடன் சிக்கிய கணவன் - சிதைத்த மனைவி
வைரலாகும் அந்த வீடியோவில், மணமகனும், மணமகளும் ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டதைக் காணலாம். திருமணம் நடந்த பிறகு, மணமகள் மணமகனின் கால்களைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்க முயற்சித்த போது, அதை தடுத்த மாப்பிள்ளை, தான் குனிந்து மணமகளின் கால்களைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார். இதைப்பார்த்த மணப்பெண் உட்பட அங்கிருந்தவர்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பியூஷ் அவ்சார் என்றவரால் பதிவேற்றப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர், அதே நேரத்தில் இது சுமார் 10 லட்சம் முறை பார்க்கப்பட்டது.
ALSO READ | Viral Video: அனைவருக்கும் முன்னால் மணப்பெண்ணுக்கு நடந்த சம்பவம்!