Viral Video: சமூக ஊடகங்களில் திருமணம் தொடர்பான பலவித வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களாகவே கொண்டாடப்படுகின்றன. இரு நபர்கள் மட்டுமல்லாமல் இரு குடும்பங்களின் சங்கமமாக திருமணம் இருக்கின்றது. திருமணங்களில் பல வேடிக்கையான நிகழ்வுகளும் நடக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் வைரலாகும் வீடியோக்களின் மூலம் பல்வேறு இடங்களில் நடக்கும் திருமணங்களில் நடந்த சுவாரசியமான, வித்தியாசமான, வேடிக்கையான விஷயங்களை நாம் காண்கிறோம். அப்படி ஒரு வித்தியாசமான திருமண வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. இதைப் பார்த்தால் நம் கண்கள் கலங்குகின்றன. இந்த வீடியோ நமக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையிலும் இருக்கின்றது.


வீடியோவின் துவக்கத்தில் திருமணம் நடந்த ஒரு வீட்டை காண முடிகின்றது. மணப்பெண்ணை அவரது கணவர் வீட்டிற்கு அனுப்புவதற்காக அனைவரும் தயாராக இருக்கிறார்கள். மணமகளின் வீட்டில் இருந்து அழுகை குரல் கேட்கிறது. தன் பெற்றோரைப் பிரிந்து கணவன் வீட்டிற்கு செல்ல மனம் இல்லாமல் மணமகள் அழுகிறார்.


அவர் தாய் வீட்டை விட்டு வெளியே வர மறுக்கிறார். இரண்டு மூன்று பேர் சேர்ந்து கட்டாயப்படுத்தி அவரை காரில் ஏற்றி கணவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த மணமகள் வீட்டை விட்டு செல்ல மனமில்லாமல் கதறி அழுவதை வீடியோவில் காண முடிகின்றது.


'பாபா, பாபா' என்று அவர் தன் தந்தையை அழைப்பதையும் கேட்க முடிகின்றது. வீடியோவில் ஆரஞ்சு நிற சட்டை அணிந்த ஒருவரும் மகள் செல்வதை தாங்கிக்கொள்ள முடியாமல் அழுவதை காண்கிறோம். அவர்தான் அந்த பெண்ணின் தந்தையாக இருக்க வேண்டும்.


இந்த வீடியோ பார்ப்பதற்கு சிலருக்கு வேடிக்கையாக இருக்கலாம், சிலருக்கு வித்தியாசமாகவும், சுவாரசியமாகவும் இருக்கலாம். ஆனால், பெண்களின் வாழ்க்கையின் நிதர்சனமான உண்மையை விளக்கும் வகையில் இது உள்ளது. பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு திடீரென்று ஒரு நாள் ஒரு புதிய வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலைமை பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு ஏற்படுகின்றது. குறிப்பாக பாசமாக வளர்ந்த தாய் தந்தையை விட்டு பிரிவது அத்தனை எளிய காரியம் அல்ல. ஆனால் இது உலக நடப்பாக தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.


மேலும் படிக்க | பானிபூரி சாப்பிட்டவரை கடத்த முயற்சி... ஆனால் கடைசியில் ட்விஸ்ட் - பரபரப்பான வைரல் வீடியோ


அம்மா வீட்டை விட்டுப் பிரிய முடியாமல் அழுது புலம்பிய மணப்பெண்ணின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்: