Viral Video Latest: இந்த காலகட்டத்தில் மனிதர்கள் புகை, மது, பாலியல் சார்ந்த தவறான பழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதை போன்று சமூக வலைதளங்களுக்கும் அதிகம் அடிமையாகின்றனர். முன்பெல்லாம் சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்கள், பதிவுகளை பார்ப்பதற்கு மக்கள் அதிக நேரம் செலவழிப்பார்கள் என்ற நிலை மாறி அனைவருமே தற்போது வீடியோ போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் தங்களின் வீடியோக்களும், பதிவுகளும் கவனம் பெற வேண்டும் என்பதற்காக வித்தியாசமான, வினோதமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இவை அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் அமையப்பெற்றால் பாராட்டுக்குரியதுதான். ஆனால், ஆர்வக்கோளாறுத் தனத்தால் எல்லை மீறியும் சிலர் வீடியோக்களை பதிவிடுவது உண்டு.
ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள்
ஆபாசமான முறையில், வன்முறையை ஆதரிக்கும் வகையில் என பல்வேறு தவறான மற்றும் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. இவற்றை தடுக்கலாம் என்றாலும் முற்றிலுமாக போக்க முடியாது. திருடனை பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல் இதுபோன்ற தவறான வீடியோக்களை பதிவேற்றுபவர்கள் திருந்தாவிட்டால் இவற்றை தடுப்பது கடினமாகிவிடும்.
அந்த வகையில், தற்போது உத்தர பிரதேசத்தில் வைரலாகி உள்ள வீடியோ உள்ளூர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது மட்டுமின்றி போலீசாரின் நடவடிக்கையையும் சந்தித்துள்ளது. அந்த வீடியோ சார்ந்து நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது, பட்டப்பகலில் ஒருவரை கடத்துவது போல் சமூக வலைதள கவன ஈர்ப்புக்காக வீடியோ எடுத்தது அதனை பதிவிட்டனர். இந்த வைரலாகி அதனை பதிவேற்றியவர்கள் கைதானார்கள்.
மேலும் படிக்க | நடிகரை பளாரென அறைந்த பெண்! படத்தில் நடித்தது ஒரு குத்தமா? வைரல் வீடியோ..
வீடியோவில் பதிவானது என்ன?
உத்தர பிரதேசத்தின் முஸாஃபர்நகர் கட்டௌலி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது, அங்கு ஒரு பானிபூரி கடையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒருவரை, பைக்கில் வரும் இருவர் கடத்த முயற்சிக்கின்றனறர். துணியில் மயக்க மருந்தை கலந்ததை போல் நடித்து, பானிபூரி சாப்பிட்ட நபரும் மயங்கி விழுவது போல் நடித்தனர். அவர்கள் மயங்கிய நபரை பைக்கின் நடுவே அமரவைத்து அங்கிருந்து செல்ல முயற்சிக்கின்றனர். ஆனால், பைக் ஸ்டார்ட் ஆகவில்லை.
मुजफ्फरनगर, यूपी में 4 लड़के अपहरण की Reel शूट कर रहे थे। पुलिस ने चारों रीलपुत्रों को धर दबोचा। नाम हैं गुलशेर, मोनिश, सादिक और समद। @AnujTyagi8171 pic.twitter.com/LyFD88bKI2
— Sachin Gupta (@SachinGuptaUP) October 23, 2024
அதுவரை அவர்கள் அந்த நபரை கடத்துவதை சுற்றியிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். பைக் ஸ்டார்ட் ஆகவில்லை என்ற உடன் அவர்கள் நெருங்கிவந்து என்ன நடக்கிறது என பைக்கில் வந்த நபர்களை கேள்வி கேட்டனர். இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலராலும் நகைச்சுவைக்கு உள்ளாக்கப்பட்டது. Mirzapur என்ற பிரபலமான வெப்-சீரிஸின் பின்னணி இசையை பயன்படுத்தி அந்த வீடியோவை அவர்கள் பதிவிட்டிருந்தனர்.
இது வைரலானதை தொடர்ந்து உள்ளூர் மக்கள் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகினர். உடனே இந்த வீடியோவுடன் தொடர்புடையவர்களை போலீசார் கைது செய்தனர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ