வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


திருமணங்கள் தொடர்பான வீடியோக்களில் மணமகன் மணமகளின் பல வித பாணிகள் பார்ப்பதற்கு கிடைக்கும். இவை பெரும்பாலும், காண்பவர்களை சிரிக்க வைக்கும் வகையிலேயே இருக்கும். மணமக்களின் கூலான, ஜாலியான ஸ்டைலும், காதல் சொட்டும் கண் பார்வையும் இணையத்தில் வைரல் அகி விடும். 


தற்போதும் வழக்கத்துக்கு மாறாக மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும் ஒரு மணப்பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. அந்த பெண்ணின் கியூட்டான வீடியோ அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த வீடியோ பிரந்த வீட்டை விட்டு புகுந்த வீடு செல்லும் மணப்பெண் பற்றியது. இந்த வீடியோவை பார்த்துவிட்டு சமூகவலைத்தளவாசிகள் பல வித ரியாக்ஷன்களை அளிப்பதில் மும்முரமாக உள்ளனர்.


மணமகளின் கியூட்டான பாணி


வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், ஒரு மணமகள் தன் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு செல்ல தயாராக் இருப்பதை காண முடிகின்றது. மணமகள் மணமகனுடன் காரில் அமர்ந்துள்ளார். உறவினர்கள் அனைவரும் அவரை அனுப்பி வைக்க தயாராக காத்திருக்கின்றனர். 


ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வழக்கமாக காணப்படுவது போல, இங்கே யாரும் அழவில்லை, மணமகளுக்கு பிறந்த வீட்டை விட்டு செல்வதில் எந்த வித மன வருத்தமும் இருப்பது போல தெரியவில்லை. 


மேலும் படிக்க | இக்னோர் செஞ்ச மணமகன், வெச்சி செஞ்ச மணமகள்: வீடியோ வைரல் 


தன் வீட்டில் யாரும் தன் பிரிவுக்கு வருந்தாததைப் பார்த்து மணப்பெண், 'ஏன் யாரும் அழவில்லை?’ என்று கேட்கிறார். இப்படி சொல்லிவிட்டு அவர் சிரிக்கிறார். இதைக் கேட்ட குடும்பத்தினர், ‘ஏன் அழ வேண்டும், மேக்கப் கலைந்துவிடும்’ என கூறுகின்றனர்.


மணப்பெண்னின் கியூட் வீடியோவை இங்கே காணலாம்: