வரதட்சணையாக கார் கேட்ட மணமகனை கதற விட்ட மாமனார்: வீடியோ வைரல்
கூட்ட நெரிசலில் மாப்பிள்ளை எப்படி செருப்பால் அடிவாங்குகிறார் என்பதை வீடியோவில் பார்க்கலாம். பிறகு என்ன நடந்தது என்று யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமணம் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
திருமணங்களின் இலட்சக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. ஆனால் இவற்றில் சில திருமண வீடியோக்கள் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன. இவை உடனே பலரால் பகிரப்பட்டு வைரலும் ஆகின்றன. திருமண வீடியோக்களில் நாம் பல வித காட்சிகளை காண்கிறோம். திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது. சில சமயம் திருமண ஜோடிகள் அழகாக நடனமாடுவதையும், சில சமயம் காதல் வசனங்கள் பேசுவதையும், சில சமயம் முத்தங்களை பரிமாறிக்கொள்வதையும் நாம் பார்த்துள்ளோம்.
மேலும் படிக்க | பேய்க்கு பளார் என விழுந்த அடி, சிரிப்பு கேரண்டி - வைரல் வீடியோ
சமீபத்திலும் ஒரு வித்தியாசமான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இது பலரால் பகிரப்பட்டு வேகமாக வைரல் ஆகி வருகின்றாது. இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயமாக நம்மால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்படி ஒரு வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதில் திருமணத்தில் மாப்பிள்ளையை செருப்பால் அடிக்கிறார் மணமகளின் தந்தை. மாப்பிள்ளையும் பயந்து அங்கும் இங்கும் திணறி ஓடுகிறான். இந்த திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோவில், கார் ஒன்றை வரதட்சணையாக மணமகன் கோருவதாக கூறப்பட்டுள்ளது. இதனால், மணமகன் தந்தை அவரை அடிக்க ஆரம்பித்தார். மணமகன் கடுமையாக தாக்கப்பட்ட பிறகு அழத் தொடங்குகிறார் பிறகு தனது தவறை புரிந்துக் கொண்டு அமைதியாக மணமகளுடன் விடைபெற்று அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.
வீடியோவை இங்கே காணுங்கள்:
இந்த வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | மாட்டிடம் கேள்வி கேட்ட சிறுமி..அதுவும் பதில் சொல்லுதே!! செம க்யூட் வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ