‘ப்ப்பா... செமயா இருக்கு’ மோமோஸ் சாப்பிட்ட மணப்பெண்ணின் ரியாக்ஷன்: வைரல் வீடியோ
Viral Video: சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
திருமணம் என்பது மணமகனுக்கும் மணமகளுக்கும் மிக முக்கியமான ஒரு நாளாகும். இதற்காக அவர்கள் பல ஏற்பாடுகளை செய்வதுண்டு. தங்கள் உடை, மண்டபத்துக்குள் வரும் விதம், நடனங்கள் என அனைத்திலும் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. எனினும், சில சமயம், எதிர்பாராத சில விஷயங்களும் தனித்துவமான அனுபவங்களை அளிக்கின்றன.
தற்போது மீண்டும் ஒரு மணப்பெண்ணின் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவரது ஸ்டைல் மிகவும் வித்தியாசமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. இந்த வீடியோவில், மணமகள் திருமணத்திற்கான சடங்குகள் துவங்கும் முன் மோமோஸ் சாப்பிடுவதைக் காண முடிகின்றது. அதன் பின்னர் மணமகள் செய்யும் ஒரு விஷயம் அனைவரையும் சிரிக்க வைக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது முதல் வைரலாகி வருகிறது.
திருமணத்துக்கு முன் மோமோஸ் சாப்பிட்ட மணமகள்
திருமணம் தொடர்பான இந்த வீடியோவில் மணப்பெண் ஒருவர் தயாராக அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அவர் திருமண மேடைக்கு செல்ல நினைக்கும்போது மோமோசை பார்த்து விடுகிறார்.
மேலும் படிக்க | மணமகளின் வேற லெவல் குத்தாட்டம்: வாயடைத்து போன மணமகன், வைரலான வீடியோ
பொதுவாக திருமணத்தில் மணமகள் வெட்கத்துடன் இருப்பதைதான் பார்த்திருக்கிறோம். இப்படிபட்ட அட்டகாசமான பாணியை நாம் அவ்வளவாக பார்த்திருக்க மாட்டோம். இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் மணமகளின் ஸ்டைலையும் அமர்த்தலான பாணியையும் பார்த்து வியக்கிறார்கள்.
மோமோஸ் சாப்பிடும் மணமகளின் கியூட் வீடியோ இதோ:
மணப்பெண்ணின் இப்படி ஒரு ஸ்டைலை பார்த்திருக்க மாட்டீர்கள்
வைரலாகி வரும் இந்த வீடியோவில், மணமகளின் ஒரு தனித்துவமான ஸ்டைலைக் காண முடிகின்றது. இந்த வீடியோ ayu_sheeeee என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களயும் லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களும் பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.
மேலும் படிக்க | தன் குட்டிகளுக்கு சாப்பாடு வைத்ததற்காக தாய்க்கு நன்றி சொன்ன நாய்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR