`என்னது? பொண்ணு அழலயா?`: கியூட் மணப்பெண்ணால் பரபரப்பு!! வைரல் வீடியோ
அழுகை வந்தாலும், அழ முடியாத நிலையில் சில மணப்பெண்கள் தவிப்பதுண்டு. சிலர் மேக்-அப் கலைந்துவிடும் என அழுவதில்லை, சிலருக்கோ அழுகையே வருவதில்லை!!
Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தில் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
அனைத்து திருமணங்களிலும் மணப்பெண் (Bride) விடைபெற்று மாப்பிள்ளை வீட்டுக்கு கிளம்பும் தருணம் ஒரு உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும். தான் செல்லமாக வளர்ந்த வீட்டை விட்டு, தன்னை செல்லமாக வளர்த்த பெற்றோரை விட்டு ஒரு பெண் மற்றொரு வீட்டுக்கு போகும்போது, அவரளது மனதில் புயல் வீசும், அலை அடிக்கும், உணர்ச்சிப்பிரவாகம் ஏற்படும். அந்த தருணத்தில் எவ்வளவு தைரியமான பெண்ணாக இருந்தாலும், கண்கள் கலங்கித்தான் போகும்.
கலங்கிய கண்களுடன் தன் பிறந்து வீட்டு சொந்தங்களிடமிருந்து பிரியாவிடை பெற்றுச்செல்லும் பல பெண்களின் வீடியோக்களை நாம் இணையத்தில் பார்த்துள்ளோம்.
எனினும், அழுகை வந்தாலும், அழ முடியாத நிலையில் சில மணப்பெண்கள் தவிப்பதுண்டு. சிலர் மேக்-அப் கலைந்துவிடும் என அழுவதில்லை, சிலருக்கோ அழுகையே வருவதில்லை!! அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வெகுவாக பரவி வருகிறது. இதில் உள்ள மணப்பெண்ணின் கியூட்னஸ் அனைவரையும் ஈர்க்கின்றது.
பிறந்த வீட்டை பிரியும்போதும் அழவில்லை மணமகள்
மணப்பெண் புகுந்த வீட்டிற்கு செல்ல கிளம்பும்போது, அவரது உறவினர்கள் மற்றும் அங்குள்ள அனைவரும் உணர்ச்சிவசப்படுகிறார்கள். ஆனால் தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில் மணமகளின் வார்த்தைகளை கேட்டு அனைவருக்கும் சிரிப்புதான் வருகிறது. அந்த வீடியோவில் மணப்பெண் தனக்கு அழுகையே வரவில்லை என்று கூறுகிறார்.
ALSO READ | தேம்பித் தேம்பி அழ வைத்த வைரல் வீடியோ: 74 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த அண்ணன் தம்பி
உறவினர்கள் அனைவரும் அவரை கொஞ்சமாவது அழச் சொல்கிறார்கள். ஆனால் தனக்கு அழுகையே வரவில்லை என அவர் மீண்டும் மீண்டும் கூறுகிறார். இப்படி சொல்லும்போது அவருக்கு சிரிப்பும் வருகிறது. மணமகளின் இந்த சைகையால் அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிக்கத் தொடங்குகிறார்கள்.
அந்த வினோதமான திருமண வீடியோவை இங்கே காணலாம்:
மணப்பெண்ணின் அழகான ஸ்டைல் வைரலானது
புகுந்த வீட்டுக்கு செல்ல கிளம்பும்போது, மணமகள் கியூட்டாக பேசிய விஷயங்களும் விதமும் அனைவரின் மனதையும் கொள்ளை கொள்கிறது. இந்த வீடியோ (Viral Video) பகிரப்பட்டு, தலைப்பில், "முதன்முறையாக அழாத மணமகளைப் பார்த்தேன்" என்று எழுதப்பட்டுள்ளது.
weddingsfever என்ற பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் கணக்கில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ வெளியானவுடன் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்தது. இது போன்ற ஒரு திருமண வீடியோவை இன்று வரை பார்த்ததில்லை என்றும் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ | தனது அழகான மணமகளைப் பார்த்து 'out of control' ஆன மணமகன் செய்த காரியம்: வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR