மேடையில் ‘ஸ்மோக்கி கிஸ்’ கொடுத்த மணப்பெண்: ‘இங்கயேவா’ என கலாய்க்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ
Funny Wedding Video: இப்படிப்பட்ட விஷயங்களை பலர் பார்க்க மேடையில் செய்ய வேண்டுமா என பல இணையவாசிகள் இந்த ஜோடியை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என கூறப்படுகின்றது. அதுவும் காதல் திருமணங்களில் இருக்கும் அழகு பன்மடங்கு அதிகமாக இருக்கும். காதலித்து திருமணம் செய்துகொள்பவர்களின் முகத்தில், வாழ்க்கை முழுவதும் சேர்ந்து வாழப்போகிறோம் என்ற மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரியும்.
இந்திய திருமணங்கள் தனித்துவமானவை. அவை மறக்கமுடியாத தருணங்கள் நிறைந்தவை. மேலும் இந்திய திருமண வீடியோக்கள், காண்பவர்களை மகிழ்விக்கின்றன, முகத்தில் புன்னகையை வரவழைக்கின்றன. பல திருமண வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதற்கு இதுவே காரணமாகும். சமீபத்திலும் ஒரு திருமண வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு இணையவாசிகள் கலவையான எதிர்வினைகளை அளித்து வருகிறார்கள். இந்த வீடியோவில், மணமேடையில் ஹூக்காவில் புகை பிடித்துக்கொண்டே மணமகள் மணமகனுக்கு முத்தம் கொடுப்பதை காண முடிகின்றது.
இதை சில இணையவாசிகள் சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும், சிலருக்கு மேடையில் மணமக்கள் செய்த வேலை சிறிதும் பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட விஷயங்களை பலர் பார்க்க மேடையில் செய்ய வேண்டுமா என பல இணையவாசிகள் இந்த ஜோடியை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | கூப்பிட்ட பெண், ஓடோடி வந்த எருமை: இதயங்களை இளக வைக்கும் வைரல் வீடியோ
மேடையில் அழகான திருமண உடையில் மணமகள் இருப்பதை காண முடிகின்றது. அவரது அருகில் நேர்த்தியான சூட் அணிந்து மணமகனும் நிற்கிறார். வீடியோவை தொடர்ந்து பார்த்தால், மணமகள் மேடையில் வைக்கப்பட்டுள்ள ஹூக்காவிலிருந்து ஒரு பெரிய பஃப் எடுப்பதை காண முடிகின்றது. ஹூக்காவில் இருந்து பிடித்த புகையை மணமகன் வாயில் ஊதும் மணமகள், அவரை முத்தம் கொடுப்பது போல பாவனை செய்கிறார்.
மணமகளின் ஸ்மோக்கி கிஸ்ஸை இங்கே காணலாம்:
@laiba._waseem என்ற இன்ஸ்டாகிராம் பயனரால் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, ஏராளமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. இந்த சிறிய வீடியோ, இணைய பயனர்களிடமிருந்து அதிக அளவிலான எதிர்வினைகளை பெற்றுள்ளது.
இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். சிலருக்கு இது கியூட்டாக தோன்றினாலும், மற்றவர்கள் இது இந்திய மரபுகளை மீறுவதாகவும், அவ்வாறு செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளனர். "இது மிகவும் அழகாகவும் கியூட்டாகவும் இருக்கிறது" என்று ஒரு பயனர் கூறியுள்ளார்.
மற்றொரு பயனர், “நாம் நமது பாரம்பரியங்களை மறந்துவிட்டு மேற்கத்திய கலாச்சாரத்தில் மட்டுமே கவனம் செலுத்துவது வருத்தமளிக்கிறது" என்று கூறியுள்ளார். "இன்றைய இளம் தலைமுறையினர் நமது பாரம்பரியங்களைப் பற்றி அறியாமல் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. மேற்கத்திய கலாச்சாரமே அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றது” என ஒருவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க | கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த குரங்கு: இணையத்தை இளக வைத்த வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ