ரெக்க கட்டி பறக்குதடி தாத்தாவோட சைக்கிள்: கூல் தாத்தாவின் தூள் வைரல் வீடியோ

Funny Old Man Video: இந்த தாத்தாவை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. இவர் மாஸாக சைக்கிள் ஓட்டும் ஸ்டைல் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 2, 2022, 12:15 PM IST
  • கவலை இல்லாத, மகிழ்ச்சியான ஒரு குழந்தையைப் போல ரசித்து ரசித்து சைக்கிள் சவாரி செய்யும் ஒரு முதியவரின் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வயதிலும் வாழ்க்கையை நேசித்து, சுவைத்து வாழும் இந்த முதியவரிடம் நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன.
  • முதியவர் சைக்கிளில் மாஸாக ஸ்டண்ட் செய்யும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்.
ரெக்க கட்டி பறக்குதடி தாத்தாவோட சைக்கிள்: கூல் தாத்தாவின் தூள் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 

நாளுக்கு நாள் மனித வாழ்க்கை அதிக இறுக்கம் மிக்கதாகவும், அழுத்தம் மிக்கதாகவும் சோர்வை அளிக்கும் ஒரு சுமையாகவும் மாறி வருகின்றது. இந்த இறுக்கமான சூழலில் நமக்குள் இருக்கும் குழந்தைத்தனத்தை, வெகுளித்தனத்தை நாம் பெரும்பாலும் மறந்துவிடுகிறோம். நமக்கு கிடைத்துள்ள இந்த அழகான வாழ்க்கைக்கு நன்றியுணர்வுடன் இருக்கவும், அந்தந்த தருணங்களில் நாம் அனுபவிக்கும் சிறிய விஷயங்களையும் சந்தோஷங்களையும் எண்ணி மகிழவும் நாம் அடிக்கடி மறந்துவிடுகிறோம். ஆனால், ஒரு சிலர் அதை இன்னும் மறக்காமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நபரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.

கவலை இல்லாத, மகிழ்ச்சியான ஒரு குழந்தையைப் போல ரசித்து ரசித்து சைக்கிள் சவாரி செய்யும் ஒரு முதியவரின் வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வயதிலும் வாழ்க்கையை நேசித்து, சுவைத்து வாழும் இந்த முதியவரிடம் நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன. 

மேலும் படிக்க | Elephant Fight Video: தனி ஒருவனாய் சிங்கங்களை ஓட ஓட விரட்டிய யானை -மாஸ் வீடியோ 

முதியவர் மாஸாக சைக்கிள் ஓட்டிச்சென்ற போது, அதே சாலையில் சென்ற ஒருவர் இந்த வீடியோவை எடுத்ததாக தெரிகிறது. வீடியோவில் காணப்படும் முதியவர் மகிழ்ச்சியாக சைக்கிளை ஓட்டுவதுடன் பல ஸ்டண்டுகளையும் அசால்டாக செய்வதை காண முடிகின்றது. 

முதியவர் சைக்கிளில் மாஸாக ஸ்டண்ட் செய்யும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோவை ட்விட்டரில் ‘Gulzar_sahab’என்ற பயனர் 'ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்கவும்' என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு 83k வியூஸ்களும் 5,300 லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல அற்புதமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

முதியவரின் சைக்கிள் ஓட்டும் திறமையும் கவலையற்ற மனப்பான்மையும் ஆன்லைனில் பல இதயங்களை வென்று வருகிறது. "நாங்கள் முழு வீடியோவையும் பார்க்க விரும்புகிறோம், இது மிகவும் நன்றாக உள்ளது" என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். "உங்கள் ஓட்டும் திறமையால் நான் ஈர்க்கப்பட்டேன் ஐயா" என்று மற்றொரு பயனர் எழுதியுள்ளார். “லவ் திஸ்!! உங்களுடைய இந்த வீடியோ என்னை எவ்வளவு சந்தோஷப்படுத்தியது என்று உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது” என்று மற்றொரு பயனர் எழுதியுள்ளார். “இந்த வீடியோ பார்த்து நன்றாக சிரித்தேன், மகிழ்ச்சியாக இருந்தது, பகிர்ந்தமைக்கு நன்றி,” என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். 

மேலும் படிக்க | Acrobatic Dance: வாடிகனிலும் குதூகல டான்ஸ்! ரசித்து பார்க்கும் போப் வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News