Animal Fight Video: யானைகளின் இயற்கை எதிரிகளில் முதலிடத்தில் இருப்பது சிங்கங்கள். உருவத்தில், பெரிய அளவில் இருப்பதால், அது அவர்களுக்கு விருப்பமான இரையாக இல்லாவிட்டாலும், சிங்கங்கள் யானைகளைத் தாக்கும். யானையைக் கொல்லும் சக்தி வாய்ந்த ஒரே வேட்டையாடும் விலங்கு சிங்கம் மட்டுமே. யானைகள் உருவத்தில் பெரியதாக இருப்பதால், சிங்கங்கள் ஒன்றை வேட்டையாடினாலே போதும். அவை சில நாட்கள் வேட்டையாட வேண்டியதில்லை. இருப்பினும், வேட்டையாடும் சிங்கங்களுக்கு யானையை கொல்வது அத்தனை எளிதல்ல . ஆனால் பல சிங்கங்கள் ஒன்றாக சேர்ந்து தாக்கினால் என்னவாகும்? சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. இறுதியில் என்ன ஆனது என்பதை அறிந்துக்கொள்ள காணொளியை பாருங்கள்.
மேலும் படிக்க: Lion Video: என்று தணியும் இந்த தீ? எரியும் காட்டில் சோக நடை போடும் சிங்கம்
இந்த அரிய காட்சியை கிளெமென்ட் பென் என்பவர் கேமராவில் படம் பிடித்தார். அந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசந்தா நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். "ஒற்றை யானை 14 சிங்கங்களை எதிர்த்து வெற்றி பெறுகிறது. காட்டின் ராஜாவாக யார் இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது.
Lone tusker takes on 14 lionesses & wins…
Who should be than king of forest ?
Via Clement Ben pic.twitter.com/kYbZNvabFv— Susanta Nanda (@susantananda3) August 27, 2022
காணொளியில், ஆற்றங்கரையில் யானை ஒன்று சிங்கங்களால் தாக்கப்படும் காட்சியைக் காணலாம். ஒரு சிங்கம் யானையின் முதுகில் ஏறி அமர்ந்து தாக்குகிறது. அதோடு, நான்கு பக்கமும் யானை சுற்றி வளைத்த சிங்கங்கள் அடுத்தடுத்து தாக்குகின்றன. சிங்கங்களிடம் இருந்து தண்ணிக் காப்பற்றிக்கொள்ள யானையின் முயற்சி வெற்றி பெறுகிறது. அருகில் இருக்கும் ஆற்றின் தண்ணீருக்குள் யானை செல்கிறது, கோரப் பசியுடன் தாக்கும் சிங்கங்கள் பின் வாங்குகின்றன. முதுகில் அமர்ந்து தாகிய சிக்கம் கீழே குதித்து ஓடுகிறது.
சிங்கங்கிடம் இருந்து தப்பித்த "வாடா பார்த்துக்குலாம்" என்ற வடிவேலு ஸ்டைலில் சென்ற யானை, திடிரென யூ-டர்ன் அடுத்து, சிங்கங்களை ஓட ஓட விரட்டியது.
மேலும் படிக்க: 10 அடி நீள பாம்பை கூலாக குளிப்பாட்டி விடும் நபர்: வீடியோவை பாருங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ