Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் (Marriage Video) இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு மணப்பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 


திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பிற்காக (pre-wedding shoot) இந்த மணப்பெண் ஜிம்மிற்கு செல்கிறார். ஆம்!! கேட்பதற்கு வினோதமாக இருந்தாலும் இது உண்மைதான். மணப்பெண் அலங்காரத்தில் ஜம்மென்று ரெடியாகி ஜிம் சென்ற மணமகளை பலரும் பல கேள்விகள் கேட்டார்கள். 
‘இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம், இப்ப போய் ஜிம்முக்கு போகணுமா’ என கேள்விகள் எழுந்தாலும் அவர் யார் சொல்வதையும் கேட்கவில்லை. 


ப்ரீ வெட்டிங் ஷூட்டிற்காக பலரும் பல அழகான இடங்களுக்கு சென்று கொண்டிருக்க, இந்த பெண் ஜிம்மிற்கு சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் அதிகம் பார்க்கப்படுகிறது. இந்த வீடியோவை ஐபிஎஸ் ரூபின் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பகிர்ந்த அவர், ‘ப்ரீ வெட்டிங் ஷூட்.. இன்று இவரது தைரியத்தின் ரகசியம் தெரிந்தது’ என்று எழுதியுள்ளார்.


ALSO READ: Viral Video: அம்மானா சும்மாவா? பருந்தை பந்தாடிய கோழியின் வைரல் வீடியோ 


திருமணத்திற்கு முந்தைய படப்பிடிப்பின் இந்த வேடிக்கையான வீடியோ இதுவரை லட்சக்கணக்கான முறை பார்க்கப்பட்டு ஏராளமான நெட்டிசன்கள் தங்கள் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.


சுமார் அரை நிமிடம் கொண்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதில் ஒரு மணப்பெண் ப்ரீ வெட்டிங் ஷூட்டிற்காக நன்றாக அலங்காரம் செய்துகொண்டு ஜிம்மிற்கு செல்கிறார். அங்கு சென்று கைகளுக்கான உடற்பயிற்சியை செய்யத் தொடங்குகிறார்.


முழு அலங்காரத்தில் உள்ள மணமகள் (Bride) ஜிம்மில் அதிக கனமான டம்பல்ஸை கூட தூக்குகிறார். இது பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. மணமகள் இப்படி பல முறை செய்கிறார். கேமராமேன் அவரை புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக உள்ளார்.


வீடியோவின் இரண்டாவது ஃபிரேமில், மணமகள் மீண்டும் உடற்பயிற்சி செய்வதைக் காண முடிகின்றது. மூன்றாவது ஃபிரேமில், மணமகள் உடற்பயிற்சி செய்வதைப் பார்ப்பது மிகவும் வேடிக்கையாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது.


அந்த வீடியோவை இங்கே காணலாம்



திருமணத்திற்கு முந்தைய, ப்ரீ வெட்டிங் ஷூட்டிற்கு ஆண்களும், பெண்களும் மலைப்பாங்கான பகுதிகள், பூங்காக்கள், கடற்கரை என இப்படிப்பட்ட அழகான இடங்களுக்கு செல்ல விரும்புவார்கள். ஆனால், இந்த மணமகளோ ஷூட் செய்ய ஒரு ஜிம்மை தேர்ந்தெடுத்தார். இந்த வீடியோ, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என பல்வேறு சமூக வலைதளங்களிலும் வைரலாகி (Viral Video) வருகிறது.


ALSO READ:இவ்வளவு முகமூடிகளை சில நொடிகளில் அணிந்து உலக சாதனை - வைரல் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR