வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு சடங்குகளுடன் திருமணங்கள் நடக்கின்றன. திருமணத்தில் பல தினுசில் காட்சிகள் காணப்படுகின்றன. சில நேரங்களில் மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் செய்யும் செயல்கள் நம் மனதை கொள்ளை கொள்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில சமயங்களில் மணமகனும், மணமகளும் தங்கள் தனித்துவமான எண்ட்ரி மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறார்கள். சில சமயங்களில் மணமக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையும் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. 


சமூக ஊடகங்களில் தற்போது ஒரு திருமண வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இதில் காணப்படும் காட்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. ஏனென்றால் இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாத வகையில் இதில் மணமக்கள் நடனமாடுவதை காண முடிகின்றது. 


மேலும் படிக்க | சீண்டிய மணமகன், கடுப்பாகி களேபரம் செய்த மணமகள்: ஷாக் கொடுக்கும் வைரல் வீடியோ 


திருமணத்தில் கலக்கிய மணமக்கள் 


மேடையில் மணமக்கள் ஜோடியாக நிற்பதை காண முடிகிறது. சிறிது நேரம் கழித்து, இருவரும் நடனமாடத் தொடங்குகிறார்கள். அங்கிருந்த அனைவரும் கைதட்டி அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்தால் அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கும். 


மேடையில் கலக்கிய மணமக்கள்


மணமகனும், மணமகளும் நடிகர் கோவிந்தா நடித்த ஒரு இந்தி பாடலுக்கு நடனமாடுகிறார்கள். இருவரும் ஒத்திசைந்து ஆடுவது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இருவரும் நடனமாடும் போது இருவரது முகத்திலும் மகிழ்ச்சி தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோவைப் பார்த்து, மக்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். பல வித ரியாக்‌ஷன்களையும் அளித்துள்ளார்கள்.


வீடியோ வைரல் ஆனது 


இந்த வீடியோ சமூக வலைதளமான யூடியூப்பில் பகிரப்பட்டது. இந்த வீடியோ மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டது. இதுமட்டுமின்றி, லட்சக்கணக்கான சமூக ஊடக பயனர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்துள்ளனர். கமெண்ட் பகுதியில் பலரும் பலவிதமான ரியாக்ஷன்களை அளித்து வருகின்றனர். 


மாஸாக மேடையில் கலக்கிய மணமக்களின் வீடியோவை இங்கே காணலாம்: 



மேலும் படிக்க | மாப்பிள்ளைக்கு கிஸ் கொடுத்த மச்சினிச்சி: ஷாக் ஆன மணமகளின் வைரல் வீடியோ 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ