இணையதளங்களில் கணக்கு வழக்கில்லாமல் எக்கச்சக்கமாக பல வீடியோக்கள் குவிந்து கிடக்கின்றது. அதில் நமது இதயங்களை கவரும் விதமாக பல காட்சிகள் நிரம்பியிருக்கும், பெரும்பாலான காட்சிகள் நமது துன்பத்தை நீக்கி புத்துணர்வு தரும் வகையிலேயே அமைந்திருக்கும். இதுபோன்று இணையதள பக்கத்தில் நிரம்பியுள்ள வீடியோக்களில் வித்தியாசமாக இருப்பது சீக்கிரம் வைரலாகி விடும். அதுபோன்ற ஒரு பேல்பூரி வியாபாரியின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக வித்தியசமான உணவு வகைகள் தயாரிக்கும் காட்சி பலராலும் ரசிக்கப்படுகிறது, இப்போதெல்லாம் பெரும்பாலும் இணைய பக்கங்களில் ஃபுட் ரிவியூ, ஃபுட் வ்லாக்குகள் தான் அதிகமாக நிரம்பி கிடக்கின்றன.
நம்மில் பலருக்கும் ஜங்க் ஃபுட்ஸ் பிடிக்கும், அது உடலுக்கு கேடுவிளைவிக்கும் என்றாலும் அதன் ருசி பலருக்கும் பிடித்துப்போனதால் அதைவிட மனமில்லாமல் பலரும் சாப்பிட்டுவிடுகிறோம். பொறியை வைத்து தயாரிக்கும் சாட் வகை உணவான பேல்பூரியை பலரும் சாப்பிட்டிருப்போம், ஆனால் ஹெலிகாப்டர் பேல்பூரியை சாப்பிட்டிருப்போமா? இங்கு ஒரு வியாபாரி ஹெலிகாப்டர் பேல்பூரி விற்பனை செய்து வருகிறார். அதுதான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஹெலிகாப்டர் பேல்பூரி என்றதும் பலருக்கும் தோன்றுவது அந்த வியாபாரி ஹெலிகாப்டரில் வந்து பேல்பூரியை விற்பனை செய்வாரோ அல்லது சிறிய அளவில் ஹெலிகாப்டர் போன்று வடிவமைத்து அதன்மூலம் பேல்பூரியை பரிமாறுவாரோ என்பது தான்.
மேலும் படிக்க | திடீரென அருகில் வந்த பாம்பு: சிறுமி செய்த வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள்
ஆனால் அதுதான் இல்லை, ஹெலிகாப்டர் வேகத்தில் அவர் தனது கைகளை சுழற்றி இந்த பேல்பூரியை தயாரிக்கிறார். ஒரு பாத்திரத்தில் பொறி, வெங்காயம், கொத்தமல்லி, பூரி, சட்னி, உருளைக்கிழங்கு மற்றும் சில மசாலாக்கள் சேர்த்து பெரிய கரண்டியை வைத்து வேகமாக கிளறி அதனை ஒரு தட்டில் வைத்து பரிமாறுகிறார். இந்த வீடியோவை பல இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளதோடு, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.
மேலும் படிக்க | பாம்புக்கு முரட்டுத்தனமா காதல் வந்தா என்ன ஆகும்? வீடியோ வைரல் ஆகும்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ