முதுகு சொறிய கணவன் செய்த செயலை கண்டு வாயடைத்துப் போன மனைவி: வீடியோ வைரல்

Husband Wife Viral Video: இந்த வீடியோவில் கணவனின் இந்த செயலால் மனைவி அதிர்ந்து போகிறாள், அதன்படி இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 8, 2022, 11:35 AM IST
  • கணவன் மனைவியின் வைரல் வீடியோ.
  • அற்புதமான வழியை கண்டுபிடித்த கணவன்.
  • அதிர்ந்து போன மனைவி.
முதுகு சொறிய கணவன் செய்த செயலை கண்டு வாயடைத்துப் போன மனைவி: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். அந்தவகையில் சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், கணவன் மனைவி வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தளத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இந்த வீடியோக்களில் பலவற்றைப் பார்த்தவுடன் நாம் பயப்பட வைக்கிறது, அதேபோல் சில நேரங்களில் சிரிப்பை நிறுத்துவது கடினமாகிறது. அப்படிப்பட்ட ஒரு வேடிக்கையான வீடியோ இங்கே இப்போது வெளிவந்துள்ளது, இது உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அந்த காணொளி கணவன்-மனைவிக்கு தொடர்புடையது போலவும், அதில் ஏதோ ஒன்று மனைவியை அதிர வைக்க செய்துள்ளது. இந்த வேடிக்கையான வீடியோ இதுவரை மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்களால் விரும்பப்பட்டுள்ளது. 

அற்புதமான வழியை கண்டுபிடித்த கணவன்
சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோவைப் பார்த்தபோது, ​​அந்த நபரின் முதுகில் கடும் அரிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. ஆனால் உதவிக்கு யாரும் இல்லாததைக் கண்டு அவரே ஒரு அற்புதமான வழியை கண்டுபிடிக்காரர். இதற்காக முதலில் டேபிள் ஃபேனை கொண்டு வந்து அதன் மீது சுமார் இரண்டடி நீளமுள்ள கம்பியை கட்டினார். இப்போது அதன் ஒரு முனையில் ஒரு பெரிய காகிதத்தை வெட்டி வைக்கிறார். இப்போது ஃப்ரேமில் பார்த்த காட்சி மிகவும் வேடிக்கையாக உள்ளது. மின்விசிறியை ஆன் செய்தவன் வசதியாக படுக்கையில் படுத்துக்கொண்டார்.

மேலும் படிக்க | காதலா, ஊடலா, கொஞ்சலா, கெஞ்சலா? இணையத்தை குழப்பும் பாம்புகளின் வைரல் வீடியோ

கணவனின் செயலால் அதிர்ந்து போன மனைவி
மின்விசிறி நகரும்போது, ​​காகிதத் துண்டு கணவரின் முதுகிலும் சுழலத் தொடங்கியது. இதனால் அந்த நபருக்கு அதிக ஓய்வு கிடைத்து சில நிமிடங்களில் உறங்கி விட்டார். இப்போது பிரேமில் காணப்படும் காட்சி மிகவும் வேடிக்கையானது. உண்மையில், கணவனின் இந்த செயலை அறைக்குள் நுழைந்தவுடன் கண்ட மனைவி உறைந்துப்போகிறார். இருப்பினும், இறுதியாக அவரது மனைவி கணவனின் இந்த செயலை பாராட்டுவதை நாம் இந்த வீடியோவில் காணலாம்.

கணவன் மனைவியின் வீடியோவை இங்கே பார்க்கவும்

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

சமூக ஊடகங்களின் வைரலாகி வரும் இந்த வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமில் rising.tech என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. மேலும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

மேலும் படிக்க | கொஞ்சம் அழகா இருந்தா இப்டிதான் ஃபாலோ பண்ணுவானுங்களோ... பூனையின் க்யூட் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News