வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது. திருமணங்களின் போது பல சுவாரசியமான நிகழ்வுகளும் நடப்பதுண்டு.


சமூக ஊடகங்களில் நாம் தினமும் பல திருமண வீடியோக்கள் பகிரப்படுவதை காண்கிறோம். இவற்றில் பல வீடியோக்கள் மிகவும் வேடிக்கையான தருணங்களை நமக்கு படம் பிடித்து காட்டுகின்றன. இவற்றில் மணமக்களுக்கு இடையில் இருக்கும் அன்பு, பாசம், காதல், கோவம் என அனைத்தையும் நாம் காண முடிகின்றது. மணமக்களை தவிர, மணமக்களின் உறவினர்களும் நண்பர்களும் திருமணங்களில் செய்யும் கிண்டல்களுக்கும் குறும்புகளுக்கும் கூட பஞ்சம் இருப்பதில்லை. சமீபத்திலும் மிக வித்தியாசமான ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. பொதுவாக திருமண நாளில், மணமகனும், மணமகளும் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள். சில சமயம் சில பரிதாபங்களும் நடப்பதுண்டு.


அப்படி ஒரு இக்கட்டான தருணத்தின் வீடியோதான் தற்போது வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவில் மேடையிலேயே மணமகனும் மணமகளும் தொப்பென்று விழுவதை பார்த்தால் நமக்கே பரிதாபமாகத்தான் உள்ளது. என்ன நடந்தது என இங்கே பார்க்கலாம்.


மேலும் படிக்க | சின்னப்புள்ளையா இருக்கும்போது இப்படித்தானே விளையாடினீங்க? ஞாபகம் வருதே.... வீடியோ வைரல்


உசுப்பேற்றிய நண்பர்கள்


மணமேடையில் மணமகனும் மணமகளும் நின்று கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது மணமகனின் நண்பர்கள் மணமகளை தூக்கிக்கொண்டு போஸ் கொடுக்க சொல்கிறார்கள். ஆனால், இது மணமகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகின்றது. அவர் முகத்தை மூடிக்கொள்கிறார். மணமகனும் நண்பர்களின் வற்புறுத்தலுக்காகவே மணமகளை தூக்குகிறார். மூன்று முறை முயற்சித்து முடியாமல் போகிறது. ஆனால் கடைசியில் எப்படியோ மாப்பிள்ளை மணமகளை தூக்கி விடுகிறார். ஆனால் அதன் பிறகு தான் அனைத்தும் மாறி விடுகிறது. மாப்பிள்ளை தனது சமநிலையை இழந்துவிடுகிறார். இருவரும் மேடையிலேயே விழுந்துவிடுகிறார்கள்.


மேடையில் விழுந்த மணமக்களின் வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ இணையத்தில் வைரல் ஆனது


இந்த வேடிக்கையான வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @manojpehul என்ற பயனர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு வெவ்வேறு கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.


'இப்படி நண்பர்கள் பேச்சைக்கேட்டு மாட்டிக்கொண்டு விழிப்பது தேவையா?' என ஒரு பயனர் கேள்வி கேட்டுள்ளார். 'மாப்பிள்ளை மணப்பெண்ணிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறார்' என மற்றொரு பயனர் கூறியுள்ளார். 'உசுப்பேற்றிய அனைத்து நண்பர்களின் நட்பும் இனி கட் தான்' என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | இது நிஜம் தானா? மாடுக்கும் பாம்புக்கு இப்படியொரு நட்பா? வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ