சின்னப்புள்ளையா இருக்கும்போது இப்படித்தானே விளையாடினீங்க? ஞாபகம் வருதே.... வீடியோ வைரல்

Funny Video Viral: அசடு வழிய வைக்கும் ஆட்டுக்குட்டி... சின்னப்புள்ளையா இருக்கும்போது இப்படித்தானே விளையாடினீங்க? ஞாபகம் வருதே.... வீடியோ வைரல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 4, 2023, 03:24 PM IST
  • குழந்தைகள் பருவத்தை நினைவூட்டும் விளையாட்டு
  • ஆடுகளின் குறும்பு விளையாட்டு
  • மியூசிகல் சேர் விளையாடும் ஆட்டுக் குட்டிகள்
சின்னப்புள்ளையா இருக்கும்போது இப்படித்தானே விளையாடினீங்க? ஞாபகம் வருதே.... வீடியோ வைரல் title=

சமூக ஊடகத்தில் வெளியாகும் வீடியோக்கள், நமது மனதை மகிழ்விக்கின்றன. இன்றைய காலகட்டத்தில், மொபைல் பயன்பாட்டின் எதிரொலி, நமக்கு மனிதர்களை விட, கைப்பேசியே போதும் என்ற அளவுக்கு மோசமாகிவிட்டது. இணையத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். இணையதளம் மனிதர்களை தனி உலகமாக மாற்றிவிட்டது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர்.

அதற்கு காரணம், உலகின் எங்கோ நடக்கும் விஷயத்தை, உடனடியாக நாம் இருக்கும் இடத்திலேயே பார்த்துவிடலாம். பல்வேறு செய்திகளைச் சொல்லும் வீடியோக்கள் முதல், விளையாட்டு, வேடிக்கை விநோதம் என வித்தியாசமான வீடியோக்களும், காமெடி வீடியோக்களும் அனைவரையும் ஜாலியாக உணர வைக்கின்றன.

அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.

மேலும் படிக்க | Hugging Video: நல்லா தூங்குறவங்களை கட்டிபிடிச்சா என்ன நடக்கும்? வெக்கம் வருமா? இல்லை தூக்கம் வரும்

அதிலும் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் நமது அன்றாட வாழ்வில் பார்த்து வரும் விலங்குகளின் மூர்க்கத்தனம், செல்லம் கொஞ்சுவது, விளையாட்டு போன்ற வீடியோக்கள் மனதை மயக்குகின்றன.

சில வீடியோக்கள், நமது பால்யகால நினைவுகளை மீட்டு வரும். அதுபோன்ற வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அந்த வகையில், ஆட்டுக் குட்டிகளின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வைரலாகும் வீடியோவில், வைக்கப்பட்டிருக்கும் ஒற்றை சேரின் மீது ஒரு ஆடு ஏறி நின்றதும், மற்றொன்று மேலே குதித்து, ஏற்கனவே நிற்கும் ஆட்டை தள்ளுகிறது. இப்படி பல ஆடுகள் தொடர்ந்து மேலே கீழே என தள்ளுமுள்ளுவில் ஈடுபடுவதை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. நீங்களும் இந்த வீடியோவை பார்த்து மகிழுங்கள்.

பொதுவாக ஆடுகள் விளையாடிக் கொண்டும், தள்ளிக்கொண்டும் பொழுதைப் போக்குவதாகவே நாம் நினைக்கிறோம். ஆனால், அது வெறும் விளையாட்டு மட்டும் இல்லை. உண்பதும் உறங்குவதுமா வாழ்க்கை? கழுத்தில் கயிறைப் போட்டு கட்டி வைத்துவிட்டு, மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றால் போதுமா? 

ஒரே போர் அடிக்கும் வாழ்க்கையை கொஞ்சம் சுவாரசியமாக மாற்றும் விளையாட்டு சுட்டிகளின் இந்த வீடியோ வைரலாகிறது.

மேலும் படிக்க | கியூட்டா ஒரு கேட்வாக்: அசத்தும் நாய் மாடல்கள்.. வியக்கும் நெட்டிசன்ஸ்!! வைரல் வீடியோ

பொதுவாக இணையத்தில், பாம்புகள், யானைகள், காட்டு விலங்குகள், விலங்குகளின் சாதுர்யம் என வித்தியாசமான வீடியோ தான் வைரலாகும் என்றாலும், நமது குழந்தைப் பருவத்தை மனதில் கொண்டு வரும் உள்ளே-வெளியே விளையாட்டைப் போல, மேலே-கீழே என ஆடுகள் குதித்து விளையாடுவது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

யோசித்துப் பாருங்களேன், குழந்தைகளாக இருக்கும்போது உள்ளே வெளியே என விளையாடும்போது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும், கொஞ்சம் தள்ளு முள்ளு இருந்தாலும், அதுதானே விளையாட்டின் சுவாரசியம்?

மேலும் படிக்க | Viral Video: முதல் முத்தம் கொடுத்த போதை... தலைகால் புரியாமல் சுற்றும் நாய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News