பந்தா காட்டிய மாப்பிள்ளை, இரண்டே நிமிடத்தில் வழிக்கு கொண்டுவந்த மணப்பெண்: வைரல் வீடியோ
Funny Wedding Video: பந்தா காட்டிய மாப்பிள்ளையை இரண்டே நிமிடத்தில் வழிக்கு கொண்டு வந்தார் மணமகள். மணமக்களின் இந்த கியூட் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.
வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு சடங்குகளுடன் திருமணங்கள் நடக்கின்றன.
திருமணங்களில் நாளுக்கு நாள் மணமக்களின் புதிய பாணிகள் காணக்கிடைக்கின்றன. இவர்களது ஸ்டைல், நடனம், எண்ட்ரி என அனைத்துமே வித்தியாசமாக இருக்கிறது. குறிப்பாக, மாலை மாற்றும் நிகழ்வின் போது, பல வித கிண்டல்களும் கேளிக்கைகளும் நடக்கின்றன. சில நேரங்களில் மணமக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள், சில சமயங்களில் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். சில சமயங்களில் பொய் கோபமும் காட்டுகிறார்கள்.
தற்போது திருமணம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாலை மாற்றும் மணமகள் மணமகனுக்கு மாலை அணிவிக்க வருகிறார். ஆனால், மாப்பிள்ளை பொய்க்கோவம் காட்டி, மாலையை அணிவித்துக் கொள்ளாமல் டிமிக்கி கொடுக்கிறார்.
மேலும் படிக்க | மாப்பிள்ளைக்கு கிஸ் கொடுத்த மச்சினிச்சி: ஷாக் ஆன மணமகளின் வைரல் வீடியோ
மணமகள் சிறிது நேரத்துக்கு மணமகனுக்கு மாலை அணிவிக்க முயற்சிக்கிறார். ஆனால், பிறகு, இப்படி கெஞ்சுவதற்கு பதிலாக, சரியான பாடம் புகட்டுவது நல்லது என முடிவு செய்கிறார். பின்னர் மணமகள் செய்த காரியத்தால் மணமகன் தானாக வழிக்கு வருகிறார்.
பந்தா காட்டிய மாப்பிள்ளை
வைரலான வீடியோவில், மணமகனும் மணமகளும் மணமேடையில் இருப்பதை காண முடிகின்றது. மாலை மாற்றும் சடங்கு துவங்குகிறது. மணமகள் மணமகனுக்கு மாலை அணிவிக்கச் செல்லும் போது, மணமகன் பந்தா காட்டத் தொடங்குகிறார். மணப்பெண் மாப்பிள்ளையின் இந்த செயலால் எரிச்சலடைகிறார். அவரும் கோவித்துக்கொண்டு திரும்பி நின்றுகொள்கிறார். இதை மாப்பிள்ளையால் தாங்க முடியவில்லை. உடனடியாக மாப்பிள்ளை அவரை சமாதானம் செய்து விடுகிறார். பின்னர் மாலை மாற்றும் நிகழ்வு நன்றாக நடந்தது.
பந்தா காட்டிய மாப்பிள்ளையின் வீடியோவை இங்கே காணலாம்:
மணமகள் மணமகனை வழிக்கு கொண்டு வரும் விதத்தை இந்த வீடியோவில் காண முடிகின்றது. திருமணம் தொடர்பான இந்த வீடியோ parulgargmakeup என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான லைக்குகளையும் வியூஸ்களையும் பெற்றுள்ளது. மணமக்களின் இந்த கியூட் கோபத்தை இணையவாசிகள் விரும்பி பார்த்து வருகிறார்கள். பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள்.
மேலும் படிக்க | இது புதுசா இருக்கே..! மருந்து டப்பாவில் திருமண அழைப்பிதழ் அடித்த தம்பதி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ