‘மேடையிலேயே ஆரம்பிச்சிட்டாங்களா!!’: மணமக்கள் செய்த வேலையால் ஷாக் ஆன நெட்டிசன்கள்
Funny Wedding Video: மணமேடையில் மணமகன் மணமகளுக்கு கொடுத்த நீளமான முத்தத்தின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இது பார்ப்பதற்கு மிக வேடிக்கையாக உள்ளது.
வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். திருமண தின நிகழ்வுகளை நாம் நம் மனதில் எப்போதும் நினைத்துப் பார்க்கிறோம். திருமணத்தில் பல வகையான தருணங்கள் மக்களை மிகவும் மகிழ்விக்கின்றன. நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு சடங்குகளுடன் திருமணங்கள் நடக்கின்றன. திருமணத்தில் பல தினுசில் காட்சிகள் காணப்படுகின்றன.
சமூக ஊடக உலகில் திருமணம் தொடர்பான வீடியோக்கள் அதிகம் பார்க்கப்பட்டு பதிவேற்றப்படுகின்றன. இவற்றில் தனித்துவமாக இருக்கும் பல வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு பல மாதங்கள் வரை இணையத்தை கலக்குகின்றன. இதுபோன்ற ஒரு வீடியோ தற்போது அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது.
திருமண சடங்கின் போது மணமக்கள் செய்த செயலை பார்த்து விருந்தினர்களாலும் இணையவாசிகளாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை. இந்த வேடிக்கையான வீடியோவை நெட்டிசன்கள் வெகுவாக லைக் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ தொடர்ந்து ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | பந்தா காட்டிய மணமகள், மேடையில் மாப்பிள்ளை செய்த வேலை: வைரல் வீடியோ
மணமக்களுக்கு முத்தமிட வந்த அனுமதி
வீடியோவை பார்க்கும்போது, திருமணம் தொடர்பான முக்கிய சடங்குகள் அனைத்தும் முடிந்து விட்டதாக தெரிகிறது. இப்போது மணமகனும், மணமகளும் நெருக்கமாக அமர்ந்து சடங்குகள் செய்யப்படுகின்றன. இந்த சடங்குகளின் ஒரு பாகமாக, இருவரும் ஒருவரையொருவர் முத்தமிடுமாறு கூறப்படுகிறார்கள். ஆனால் வீடியோவில் இதற்கு பிறகு காணப்படும் காட்சி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
முத்தமிடலாம் என கூறப்பட்டவுடன், மணமகன் உடனடியாக தனது மணமகளை முத்தமிடத் தொடங்கினார். பின்னர் நீண்ட நேரத்துக்கு அவர் மணமகளை முத்தமிடுகிறார். சுற்றி இருக்கும் விருந்தினர்களால் இதைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை. அப்போது மணப்பெண்ணின் ரியாக்ஷனை பார்க்கவும் வேடிக்கையாக உள்ளது.
மணமகன் மற்றும் மணமகளின் வேடிக்கையான வீடியோவை இங்கே காணலாம்: