காரில் புகுந்து 200 கிமீ பயணித்த ராஜ நாகம்: வெளியில் வந்தது எப்படி? வைரல் வீடியோ

King Cobra Viral Video: பாம்புடன் காரில் பயணம் செய்ததுண்டா? அப்படி ஒரு திகில் பயணத்தின் வீடியோ வைரல் ஆகியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 1, 2022, 01:05 PM IST
  • காரில் புகுந்த ராஜ நாகம்.
  • 200 கிமீ சொகுசு பயணம்.
  • வன அதிகாரிகள் மீட்டு காட்டில் விட்டனர்.
காரில் புகுந்து 200 கிமீ பயணித்த ராஜ நாகம்: வெளியில் வந்தது எப்படி? வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத, காண்பதற்கு மிக அரிதான பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். இணையத்தில் ஒவ்வொரு நாளும் புதிய வீடியோக்கள் வெளியிடப்பட்டு வைரலாகி வருகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களே பெரும்பாலும் அதிகமாக இருக்கின்றன. அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் எப்போதும் பரவலாக பார்க்கப்பட்டு பகிரப்படுகின்றன. சில நேரங்களில் இந்த வீடியோக்களை பார்ப்பது வேடிக்கையாகவும், சில சமயங்களில் மிகவும் ஆச்சரியமாகவும் இருக்கின்றது. 

நாம் நமது காரில் ஏறி பயணிக்கும் போது, ஒரு அமைதியான வசதியான பயணத்தை எதிர்நோக்கியே செல்கிறோம். ஒவ்வொரு பயணமும் நமக்கு புதிய அனுபவத்தை அளிக்கின்றது. அப்படி ஒரு 200 கிமீ பயணத்தை, சூழலைப் பாராட்டியபடியே, இனிமையான இசையை கேட்டபடியே நீங்கள் சென்றுகொண்டிருக்கும்போது, உங்கள் காரில் உங்களுக்கு தெரியாமல் ஒரு ஜீவன், உங்கள் அருகில் உள்ளது என்பதை நீங்கள் அறிந்தால் எப்படி இருக்கும்? அதுவும், அந்த ஜீவன் ஒரு 10 அடி நீள ராஜ நாகமாக இருந்தால் எப்படி இருக்கும்? 

இந்த எண்ணமே நம்மை திகிலூட்டி விடுகிறது. ஆனால், இப்படி உண்மையில் நடந்துள்ளது. ஒரு காரில், 200 கிமீ பயணத்தில் 10 அடி நீளமுள்ள ஒரு ராஜ நாகமும் பயணித்துள்ளது. மேலும், இது அந்த காரின் எஞ்சினில் சுமார் ஒரு வார காலம் இருந்துள்ளது. அதன் பின்னர் அந்த பாம்பு வனவிலங்கு பணியாளர்களால் மீட்கப்பட்டது.

மேலும் படிக்க | Viral video: ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி; எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நாகம்! 

இந்த சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவின் அர்பூகராவில் இருந்து புதன்கிழமை வன அதிகாரிகள் 10 அடி நீளமுள்ள பாம்பை ஒரு வீட்டில் இருந்து மீட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காரில் பயணம் செய்த பாம்பின் வீடியோவை இங்கே காணலாம் 

கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி மலப்புரத்தின் ஆர்ப்பூக்கரையைச் சேர்ந்த சுஜித் என்பவரது காரில், கடும் விஷம் கொண்ட இந்த பாம்பு ஊர்ந்து சென்றதாகக் கருதப்படுகிறது. இந்த சமப்வம் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் வந்து பாம்பை முதலில் வன அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றனர். அங்கிருந்து அது பின்னர் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

இந்த வினோத நிகழ்வின் வீடியோ சமூக ஊகடங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.

மேலும் படிக்க | தங்கையின் முதல் நடையால் பூரிப்படைந்த குட்டி அண்ணன்: நெட்டிசன்கள் பாராட்டும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News