வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


திருமணங்களில் மணமக்கள் வெவ்வேறு பாணியில் தங்கள் திருமண நாளை அனுபவித்து கொண்டாடுவதை நாம் கண்டுள்ளோம். இவர்களது எண்ட்ரி, ரிசப்ஷனில் இவர்கள் அணியும், உடை, நடனங்கள் என அனைத்துமே வித்தியாசமாக இருக்கும். 


தற்போது வைரல் ஆகியுள்ள ஒரு வீடியோவில், மணமக்கள் ஒரு வித்தியாசமான வேலையை செய்கிறார்கள். ஆம்!! இந்த வீடியோவில்,  மணமகனும், மணமகளும் மேடையில் புஷ்அப் செய்வதைக் காண முடிகின்றது. இருவரின் இந்த தனித்துவமான பாணியை விருந்தினர்களும் விரும்பினார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான உடனேயே தலைப்புச் செய்தியாக மாறத் தொடங்கியுள்ளது. 


மேலும் படிக்க | படுக்கையில் மனைவி செய்த வேலை, கடுப்பான கணவன்: வைரல் வீடியோ 


மணமகன் மற்றும் மணமகளின் இந்த புதிய பாணியால் பயனர்களும் ஈர்க்கப்பட்டு, பலவிதமான கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


மேடையிலேயே புஷ்அப் செய்தார்கள் 


சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் இந்த திருமண வீடியோ-வில், மணமக்கள் மேடையில் அமர்ந்திருப்பதை காண முடிகிறது. எனினும், சிறிது நேரம் கழித்து இருவரும் ஒரு சவாலுக்காக புஷ்அப்களின் செயல்முறை தொடங்குகிறார்கள். 


இருவரும் புஷ்அப் செய்ய தொடங்குகிறார்கள். மாப்பிள்ளைக்கு தினமும் புஷ்அப் செய்து பழக்கம் இருக்கும் என விருந்தினர்களால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், மணமகளும் அசால்டாய், மணமகனுக்கு ஈடாக செய்த புஷ்அப் அனவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 


புதுமண தம்பதியின் புஷ்அப் வீடியோவை இங்கே காணலாம்: