பொம்மையை எடுக்க படாதபாடு படும் நாய்க்குட்டி - வைரல் வீடியோ

ஒரு பொம்மையை எடுக்க நாய் ஒன்று படாதபாடு படும் நாய்க்குட்டியின் வீடியோ வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 21, 2022, 08:31 PM IST
  • சேட்டை செய்யும் நாய்க்குட்டி வீடியோ
  • பந்தை எடுத்ததா? இல்லையா?
  • சுவாரஸ்யமான வீடியோ வைரல்
பொம்மையை எடுக்க படாதபாடு படும் நாய்க்குட்டி - வைரல் வீடியோ title=

வீட்டில் வளரும் நாய்க்குட்டிகளின் சேட்டையை தினம்தோறும் காணலாம். அவை அனைத்தும் ரசிக்கும்படி இருக்கும். சிலர் அதனை வீடியோவாக பதிவு செய்தும் இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர். ஷேர் ஷாட் மற்றும் டிக்டாக் வந்தபிறகு இந்த மாதிரியான வீடியோக்களை அதிகம் காண முடிகிறது. யூடியூப்பில் சொல்லவே தேவையில்லை. ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இதுபோன்று இருக்கின்றன. குறிப்பாக பெட் டாக்ஸ் வீடியோ என டைப் செய்தால் நிறைய வீடியோக்களை காண முடியும்.

மேலும் படிக்க | குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் குடிமகனின் வீடியோ வைரல்

இப்போது அப்படியான வீடியோ ஒன்று இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. உரிமையாளர் விரிப்பு ஒன்றின் மீது அமர்ந்து உடற்பயிற்சி செய்கிறார். அந்த விரிப்பின் மீது நாய்க்குட்டியின் பொம்மை இருக்கிறது. அந்த பொம்மையை எடுப்பது தான் நாய்க்குட்டியின் இலக்கு. ஒவ்வொரு முறை அந்த பொம்மையை எடுக்க முயற்சி செய்யும்போதும்,  உரிமையாளர் மீண்டும்  வந்து விரிப்பின் மீது படுத்து, எழுகிறார். அவர் எழும் சமயத்தில் சரியாக அந்த பொம்மையை எடுக்க வேண்டும்.

இரண்டு மூன்று முறை முயற்சி செய்யும் அந்த நாய்க்குட்டிக்கு கடைசியாக வெற்றி கிடைக்கிறது. ஆம், தொடர்ந்து முயற்சி செய்த அந்த நாய்க்குட்டி வரு வழியாக உரிமையாளரின் விரிப்பின் மீது இருந்த பொம்மையை எடுக்கிறது. முதல் இரண்டு முறை முயற்சி செய்யும்போது, அதனுடைய முயற்சி தோல்வியில் முடிகிறது. ஏனென்றால், பொம்மையை எடுக்க முயலும் சமயத்தில் உரிமையாளர் வந்துவிடுகிறார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், நாய்க்குட்டியின் பொம்மை அங்கு இருக்கிறது என உரிமையாளருக்கு தெரியாது. அதனை நாய்க்குட்டி எடுக்க முயல்கிறது என்பதும் அவருக்கு தெரியாது. பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் இந்த வீடியோ ஒரு செய்தியையும் விட்டுச் செல்கிறது. முயற்சி செய்து கொண்டே இருந்தால் வெற்றி பெறலாம் என பொட்டில் அடித்தாற்போல் கூறுகிறது.

மேலும் படிக்க | காட்டு ராஜாவுக்கு கிளாஸ் எடுத்த எருமைகள், பல்பு வாங்கிய சிங்கங்கள்: வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News