ஆசையாய் வந்த மணமகனை பளார் என அறைந்த மணமகள்: காரணம் இதுதான், வைரல் வீடியோ
Shocking Wedding Video: சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
தினமும் திருமணம் தொடர்பான பல்வேறு வகையான வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான திருமண வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இருப்பினும், காண்பவர்களை அதிர்ச்சியடையச் செய்யும் சில வீடியோக்களும் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சியான வீடியோவில், மாலை மாற்றும் சடங்குக்கு சற்று முன்பு மணப்பெண் மணமகனை மேடையிலேயே அடிப்பதை காண முடிகின்றது.
மேலும் படிக்க | கியூட்டா ஒரு டாட்டா, இணையவாசிகளின் இதயங்களை கவர்ந்த மணப்பெண்: வைரல் வீடியோ
உத்தரபிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று இந்த சம்பவம் நடந்தது. அங்கு திருமணத்தில் கலந்துகொள்ள நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் வந்திருந்தனர். அத்தனை பேருக்கும் மத்தியில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்துள்ளது.
திருமண மேடையில் மணமகனும், மணமகளும் கைகளில் மாலைகளுடன் நிற்பதை வீடியோவில் காண முடிகின்றது. மணமகன் மணப்பெண்ணுக்கு மாலையை அணிவிக்கிறார். ஆனால்,அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், மணமகள் அவரை அறைந்துவிட்டு, அதுவும், ஒரு முறை அல்ல, இரண்டு முறை அறைந்துவிட்டு மேடையிலிருந்து வெளியேறிவிடுகிறார். இதைப் பார்த்த விருந்தினர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர். வீடியோ-வை பார்த்தால் மணமகளுக்கு மணமகனை பிடிக்கவில்லை என்பது தெரிகிறது. எனினும் இதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
மணமகள் மணமகனை பளார் என அடித்த வீடியோவை இங்கே காணலாம்: