கியூட்டா ஒரு டாட்டா, இணையவாசிகளின் இதயங்களை கவர்ந்த மணப்பெண்: வைரல் வீடியோ

Funny Wedding Video: ஜாலியாக காரில் ஏறி கியூட்டாக டாட்டா காட்டி புது வாழ்வை நோக்கி பயணிக்கும் மணமகளை இணையவாசிகள் வாழ்த்தி வருகின்றனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 19, 2022, 02:05 PM IST
  • திருமணம் முடிந்து புறப்பட்ட மணமகள்.
  • பிரியாவிடை கொடுக்கும் குடும்பம்.
  • அங்கதான் இருக்கு ஒரு ட்விஸ்ட்.
கியூட்டா ஒரு டாட்டா, இணையவாசிகளின் இதயங்களை கவர்ந்த மணப்பெண்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

திருமணங்கள் தொடர்பான வீடியோக்களில் மணமகன் மணமகளின் பல வித பாணிகள் பார்ப்பதற்கு கிடைக்கும். இவை பெரும்பாலும், காண்பவர்களை சிரிக்க வைக்கும் வகையிலேயே இருக்கும். மணமக்களின் கூலான, ஜாலியான ஸ்டைலும், காதல் சொட்டும் கண் பார்வையும் இணையத்தில் வைரல் அகி விடும். 

தற்போதும் வழக்கத்துக்கு மாறாக மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும் ஒரு மணப்பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. அந்த பெண்ணின் கியூட்டான வீடியோ அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த வீடியோ பிரந்த வீட்டை விட்டு புகுந்த வீடு செல்லும் மணப்பெண் பற்றியது. இந்த வீடியோவை பார்த்துவிட்டு சமூகவலைத்தளவாசிகள் பல வித ரியாக்ஷன்களை அளிப்பதில் மும்முரமாக உள்ளனர்.

மணமகளின் கியூட்டான பாணி

வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், ஒரு மணமகள் தன் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு செல்ல தயாராக் இருப்பதை காண முடிகின்றது. மணமகள் மணமகனுடன் காரில் அமர்ந்துள்ளார். உறவினர்கள் அனைவரும் அவரை அனுப்பி வைக்க தயாராக காத்திருக்கின்றனர். 

ஆனால் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வழக்கமாக காணப்படுவது போல, இங்கே யாரும் அழவில்லை, மணமகளுக்கு பிறந்த வீட்டை விட்டு செல்வதில் எந்த வித மன வருத்தமும் இருப்பது போல தெரியவில்லை. 

மேலும் படிக்க | இக்னோர் செஞ்ச மணமகன், வெச்சி செஞ்ச மணமகள்: வீடியோ வைரல் 

தன் வீட்டில் யாரும் தன் பிரிவுக்கு வருந்தாததைப் பார்த்து மணப்பெண், 'ஏன் யாரும் அழவில்லை?’ என்று கேட்கிறார். இப்படி சொல்லிவிட்டு அவர் சிரிக்கிறார். இதைக் கேட்ட குடும்பத்தினர், ‘ஏன் அழ வேண்டும், மேக்கப் கலைந்துவிடும்’ என கூறுகின்றனர்.

மணப்பெண்னின் கியூட் வீடியோவை இங்கே காணலாம்: 

மணப்பெண்ணின் இப்படி ஒரு பாணியை பார்த்திருக்க முடியாது

பொதுவாக, பிறந்த வீட்டை விட்டு பிரியும்போது, மணமகள் கண் கலங்குவதும் வருத்தப்படுவதும் வழக்கம். மணமகள் மட்டுமல்லாமல், அவரது வீட்டாரும், அவரை பிரியும் சோகத்தில் கலங்கித்தான் நிற்பார்கள். எனினும், இந்த வீடியோவில் காணப்படும் மணப்பென்ணும் அவரது குடும்பமும் வித்தியாசமாக உள்ளனர். 

அனைவரும் மகிழ்ச்சியாகவே காணப்படுகிறார்கள். மணமகளும் ஜாலியாக இருக்கிறார். இந்த வீடியோ wedding_visual என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. மணப்பெண்ணின் இந்த வீடியோ இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. பல லைக்குகளும் பல வித கமெண்டுகளும் இதற்கு வந்த வண்ணம் உள்ளது. ஜாலியாக காரில் ஏறி கியூட்டாக டாட்டா காட்டி புது வாழ்வை நோக்கி பயணிக்கும் மணமகளை இணையவாசிகள் வாழ்த்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral: இதுதான் என்னோட கடைசி ட்ரிப்; உணர்ச்சிவசப்பட்ட விமானப்பெண் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News