வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 


சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமணங்களின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


மேக்கப் அறையில் வசதியாக அமர்ந்திருக்கும் மணமகள் பற்றிய வீடியோ இது. கவனமாக தனது அணிகலன்களை அணிந்துகொண்டிருக்கும் மணமகள் திடீரென கலவரம் அடைவதை வீடியோவில் காண முடிகின்றது. அவர் பதட்டப்பட்டு கத்த ஆரம்பிக்கிறார். அப்படி என்னதான் நடக்கிறது அங்கு? 


மேலும் படிக்க | 'நான் பாட்டி இல்லடா, பாகுபலி': மாஸ் காட்டும் பாட்டியின் வைரல் வீடியோ 


மணமகள் திடீரென கத்தத் தொடங்கவே அங்குள்ள அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ஆனால், மணமகளின் பதட்டத்துக்கான காரணம் புரிந்தபின்னர், அவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. 


இந்த வேடிக்கையான வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர்
வேடிக்கையான இந்த வீடியோ ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. மேக்-அப் அறையில் வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் மணமகள் அமர்ந்திருப்பதை வீடியோவில் காண முடிகிறது. அவரது குடும்ப உறுப்பினர்கள் அவர தயார் செய்து கொண்டிருக்கின்றனர். முதலில் எல்லாம் சாதாரணமாகத் தெரிகிறது. மணப்பெண்ணும் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். அப்போது அவர் தன் கண் முன் எதையோ பார்க்கிறார். பார்த்த உடனேயே அவர் பதட்டமாகி கத்துகிறார். அவர் தனது நாற்காலியையும் பின்னோக்கி இழுத்துக்கொள்கிறார். அதன் பின்னர் கூச்சலிடத் துவங்குகிறார். 


அடுத்த நொடியே அவருக்கு அழுகையும் வந்துவிடுகிறது. ஆனால், இதற்கான காரணத்தை தெரிந்துகொண்டால், உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. என்ன நடக்கிற்தென்றால்,  மணமகளுக்கு முன்னால் திடீரென ஒரு பல்லி வந்துவிடுகிறது. அதைக் கண்ட மணப்பெண் பயந்துவிடுகிறார். அதன் பிறகு வீடியோவில் நடக்கும் நிகழ்வுகள் வேடிக்கையாக இருக்கின்றன. 


மணமகள் பதறி கூச்சலிட்ட அந்த வீடியோவை இங்கே காணலாம்: