Viral News: தாடைகள் இல்லாமல் பிறந்த மனிதனை மணந்த அழகிய பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் வில்லியம்ஸ் ஒரு அரிய நோயுடன் பிறந்தார். Otofacial Syndrome என்ற இந்த நோயால் அவருக்கு தாடை இல்லை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 23, 2022, 07:36 PM IST
Viral News: தாடைகள் இல்லாமல் பிறந்த மனிதனை மணந்த அழகிய பெண் title=

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோசப் வில்லியம்ஸ் ஒரு அரிய நோயுடன் பிறந்தார். Otofacial Syndrome என்ற இந்த நோயால் அவருக்கு தாடை இல்லை. அவரால் சரியாகப் பேசவோ, சாப்பிடவோ முடியாது. சாப்பிடுவதற்கு உணவுக் குழாயைப் பயன்படுத்துகிறார். சைகை மொழி பேசுவது அவருக்கு உறுதுணையாக இருந்தது. தன் வாழ்நாளை தனியே கழிக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்து வாழ்ந்து வந்தார். தன்னை சுற்றியிருந்த சிலரின் நடத்தையால், அவனது தன்னம்பிக்கையும் குறைந்தது.

இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம்ஸ் கூறுகையில், ‘ நான் ஏன் பிறந்தேன் என நினைக்க ஆரம்பித்தேன். ஆனால், என் வாழ்க்கையில் காதல் வந்ததும் தன்னம்பிக்கை பிறந்தது. இப்போது இந்த செய்தியை தன்னை போன்று கோளாறுடன் வாழ்பவர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன். தன்னம்பிக்கையுடன் இருங்கள்’ எனக் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | திருமணத்தை நிறுத்தி நாயை காப்பாற்றிய நபர் - வைரல் வீடியோ

கெட்டர்ஸ் நியூஸ் ஏஜென்சி உடனான உரையாடலில் வில்லியம்ஸ், "என்னிடம் தன்னம்பிக்கை இல்லாததால் டேட்டிங் செய்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. நான் வானியாவை 2019 ஆம் ஆண்டு சந்தித்தேன். முன்பு நாங்கள் நண்பர்களாக இருந்தோம். ஆனால் மெதுவாக காதல் பூக்க தொடங்கியது. 2020-ம் ஆண்டு நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். நான் திருமணம் செய்து கொள்வேன் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் என் அருகில் இருக்க கூட யாருக்கும் பிடிக்கவில்லை. என்னைப் பார்த்தாலே அனைவரும் ஓடிவிடுவார்கள். என்னை வித்தியாசமாக நடத்துவது வழக்கம். இதனால் தற்கொலை எண்ணம் பலமுறை மனதில் வந்தாலும் தைரியத்தை இழக்கவே இல்லை.

அவர் மேலும் கூறுகையில், கடவுள் என்னை இப்படி ஆக்கியது ஏதாவது காரணம் இருக்கும். என்னால் இந்த சுமையை தூக்க முடியும் என்று அவருக்குத் தெரிந்ததால் அவர் இந்த சுமையை எனக்குக் கொடுத்தார். நான் வித்தியாசமானவன் என்று எனக்குத் தெரியும். நான் அசிங்கமானவன் என்று அனைவரும் நினைத்தனர். அவர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கும் இதயம், உணர்ச்சிகள் உள்ளது. மற்ற சாதாரண மனிதர்களுக்குக் கிடைக்கும் அதே மரியாதை எனக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும் படிக்க | Rare Penis Plant: ஆண்குறி பூக்களைப் பறிக்காதீர்கள்: கம்போடிய அரசின் எச்சரிக்கை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News