இந்திய கலாச்சாரத்தில் திருமண விழா என்பது மிக முக்கியமான விஷயமாக உள்ளது. திருமணம் செயும் முறையில் மாறுதல்கள் இருந்தாலும் இந்தியா முழுவதும் திருமணம் செய்வதற்கான சடங்குகள் மிகவும் முக்கியத்தும் பெற்றவை. வெவ்வேறு வகையான கலாச்சாரங்களின் அடிப்படையில் திருமணம் நடைபெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு திருமணத்தில் அந்த குறிப்பிட்ட மதம் மற்றும் சாதியின் அடையாளத்தை காட்டும் பல்வேறு பழக்கவழக்கங்களும் சடங்குகளும் இடம் பெற்றிருக்கும். அதேபோல, தென்னிந்திய திருமணங்களுக்கும், வட இந்திய திருமணங்களுக்கும் பல வித்தியாசங்கள் இருக்கும்.


வட இந்திய திருமணங்களில், நடனம் ஆடுவதும் அதிலும் மணப்பெண் மற்றும் மணமகன் நடனமாடுவதும் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. மணமக்களின் குடும்பத்தினரும் நடனமாடுவார்கள்.


அதில், ஒரு வித்தியாசமான நடனமும், குடும்பத்தின் செய்கையும் இணையத்தில் வைரலாகிறது. அப்படி என்ன விஷயம்? இணையவாசிகள் இந்த வீடியோவுக்கு பல விதமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.


மேலும் படிக்க | கை, கால், தொடை, இடுப்பு... பெண்ணை கவ்விய புலி: அன்புத் தொல்லையால் அரண்ட பெண், வைரல் வீடியோ


மணப்பெண் திருமண நிகழ்வில் நடனம் ஆடுகிறார். பொதுவாக, நடனம் ஆடுபவர்களின் தலையைச் சுற்றி பணம் போடுவார்கள். அதை பணியாளர்கள் எடுத்துக் கொள்வார்கள்.


வைரலாகும் திருமண வீடியோவில், ஓரு பெண்ணும் ஆணும் நடனமாடும்போது, அவர்களை சுற்றி பலர் அமர்ந்து ரசிப்பதைப் பார்க்கலாம். சிறிது நேரத்தில், ஒருவர் வந்து பணத்தை, மணமக்களின் தலையைச் சுற்றி போடுகிறார்.



இதுபோன்ற நிகழ்வுகளில் 100-500 அல்லது 2000 ரூபாய் நோட்டுகளை தலையைச் சுற்றி போடுவார்கள்.


ஆனால், ஹிமாச்சல பிரதேசத்தின் சிர்மவுர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில், இந்த மணமக்களின் நடனத்தின்போது, ​​மணமகளின் சகோதரர்கள் மணமகள் மீது நோட்டுகள் நிறைந்த சாக்குப்பையை அப்படியே கவிழ்த்தார்.


இப்படி ஒரு சம்பவம் இதற்கு முன் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று அனைவரும் சொல்கின்றனர். 


மேலும் படிக்க | மணமகள் செய்த வேலை... அந்த ரியாக்‌ஷன்!! கொண்டாடும் நெட்டிசன்ஸ்: செம கியூட் வைரல் வீடியோ


சிர்மோர் மாவட்டத்தின் கிரிபார் ஹட்டி பகுதி அதன் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்காக அறியப்படுகிறது. அப்பகுதியின் பழக்கவழக்கங்கள்படி, திருமணத்தில் வரதட்சணையாக பணமோ, வாகனமோ கொடுக்கும் வழக்கம் இல்லை. எந்த சூழ்நிலையிலும் எந்த வகையான பண பரிவர்த்தனையும் இந்த கிராமத்தில் கிடையாது.


அதனால் தான் மணமகள் மீது இப்படி பணத்தாளை மழையாக பொழிவது விவாதப் பொருளாகிவிட்டது. மணமக்களின் நடனம், திருமண சடங்குகளின் ஒரு பகுதியாகும் அப்போது, குடும்பத்தினர்-உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் பணத்தாள்களை தலையைச் சுற்றி போடுவார்கள்.


திருமணங்களில் இப்படி பணத்தாள்களை போடுவது அவமரியாதையானது என்றோ தவறாகவோ பார்க்கப்படுவதில்லை. மணமக்கள் மீது போடப்படும் பணம், அஞ்கு பாட வந்துள்ள கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்றன. 


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | Viral Video: இனி இந்த பக்க தலை வச்சு படுக்க கூடாது... சிறுத்தையை ஓட விட்ட கலை மான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ