இணையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும், ஒரு சில வீடியோக்கள் மட்டுமே மக்களின் மனங்களை கவர்ந்து, வைரல் லிஸ்டிலும் இடம்பிடித்துவிடும். அப்படியான ஒரு வீடியோ தான் இன்றைய வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், குப்புற கவிழ்ந்து தவிக்கும் ஆமைக்கு, காட்டெருமை உதவி செய்கிறது. இதனை பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமடைந்து, காட்டெருமையை வாழ்த்துகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | Tesla காரை வெடி வைத்து தகர்த்த உரிமையாளர்.. காரணம் என்ன தெரியுமா..!!!


@manaskamran என்ற டிவிட்டர் ஐடியில் பகிர்ப்பட்டுள்ள வீடியோ மொத்தம் 15 விநாடிகள் மட்டுமே இருக்கிறது. ஆனால், அந்த 15 விநாடிகளுக்குள் இடம்பெற்றிருக்கும் காட்சி தான் உங்களை பரவசப்படுத்திவிடும். வீடியோவின் தொடக்கத்தில், காட்டெருமை தனது கொம்புகளைக் கொண்டு தரையில் எதையோ முட்டுவது போன்று தெரிகிறது. என்னடா என்று உற்றுப் பார்த்தால், ஆமை ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து கிடக்கிறது.


சரி, காட்டெருமை அதனை தொந்தரவு செய்கிறதோ? என நீங்கள் எண்ணுவதற்குள் குப்புற கவிழ்ந்து கிடக்கும் ஆமையை, கொம்பைக் கொண்டு புரட்டி இயல்பு நிலைக்கு வருவதற்கு உதவி செய்கிறது. பின்னர், ஆமை இயல்பு நிலைக்கு வந்துவிடுகிறது. காட்டெருமை அந்த உதவியை செய்த அடுத்த நொடி, கம்பி வேலிக்கு வெளியே இருக்கும் சுற்றுலாப் பயணிகள் ஆரவாரக் குரல் எழுப்பி, "you did it friend, you did it" என அதனை மனதார பாராட்டுகின்றனர்.  



ALSO READ | Viral Video: பயங்கர தீயிலிருந்து தப்பி ‘வல்லவன் வாழ்வான்’ என நிரூபித்த ‘வீர’ சிறுவர்கள்..!!


இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், விலங்குகள் நம்மை விட சிறந்தவை, ஆமைக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை அதுக்கு எப்படி தெரிந்தது? என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என கமெண்ட் அடித்து வருகின்றனர். இன்னும் சிலர், இத்தனை இரக்கம், புத்திசாலித்தனமான விலங்குகளை நாம் எப்படி மோசமாக நடத்துகிறோம்? என வேதனை தெரிவித்துள்ளனர்.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR