Viral Video: பயங்கர தீயிலிருந்து தப்பி ‘வல்லவன் வாழ்வான்’ என நிரூபித்த ‘வீர’ சிறுவர்கள்..!!

கட்டிடத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்ட போது, சாதுர்யமாக, ஜன்னல் வழியாக வெளியே வந்து  கட்டிடத்தில்  இருந்த குழாய் கம்பம் வழியாக தப்பித்து டீன் ஏஜ் சிறுவர்கள் உயிரை காப்பாற்றிக் கொண்ட வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 20, 2021, 04:38 PM IST
Viral Video: பயங்கர தீயிலிருந்து தப்பி ‘வல்லவன் வாழ்வான்’ என நிரூபித்த ‘வீர’ சிறுவர்கள்..!! title=

அமெரிக்காவில், இரு டீன் ஏஜ் சிறுவர்கள், தீ விபத்தில் இருந்து சதுர்யமாக் செயல்பட்டு தப்பித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், கட்டிடம் தீப்பிடித்து எரிவதைக் காணலாம். அந்த பெரும் தீயில் சிறுவர்கள் இருவரும் எப்படியாவது தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கின்றனர். இந்த சம்பவம் நியூயார்க்கில்  நடந்ததாக கூறப்படுகிறது. 

வைரல் வீடியோவில் (Viral Video), மிக உயரமான அந்த கட்டிடத்தின் ஜன்னலில் ஒரு சிறுவன் வெளியே தொங்குவதைக் காணலாம். சிறிது நேரம் கழித்து மற்றொரு நபரும் ஜன்னலில் இருந்து வெளியே வருவதைக் காணலாம் ஜன்னலை ஒட்டிய கம்பத்தை பிடிக்கிறார். இரண்டு சிறுவர்கள் எந்த மீட்புக் குழுவினருக்காகவும் காத்திருக்காமல் கம்பத்தின் உதவியோடு கீழே இறங்குகிறார்கள்.

ALSO READ | கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: மகனின் ‘₹3000 கோடியை’ குப்பையில் வீசிய தாய்..!!

கம்பத்தின் உதவியுடன் சிறுவர்கள் தப்பினர்

சிறுவர்கள் இருவரும் மிகவும் சாதுர்யமாக கட்டிடத்திலிருந்து கீழே இறங்குகிறார்கள், ஆனால் அவர்களுக்கு சில காயங்கள் ஏற்படுகின்றன. ஒரு சிறுவனுக்கு 13 வயது என்றும் மற்றொருவருக்கு 18 வயது என்றும் கூறப்படுகிறது. குட்நியூஸ் நிருபர் என்ற ட்விட்டர் கணக்கில் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “2 சிறுவர்களில் ஒருவருக்கு 13 வயது மற்றவருக்கு 18 வயது. நியூயார்க் நகரின் கிழக்கு கிராமத்தில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதை இதில் காணலாம். ஒரு சிறுவன் ஜன்னலில் தொங்குவதையும், மற்றொருவன் கம்பத்தில் தொங்கியபடி உதவி செய்வதையும் வீடியோவில் காணலாம்."

இருவரது உடல் நிலையும் சீராக உள்ளது

தீ மளமளவென அதிகரித்து சிறுவர்கள் இருவரும் கட்டிடத்தில் இருந்து கீழே இறங்குவதை வீடியோவில் மேலும் காணலாம். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. சிறுவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவுக்கு பயனர்கள் தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ | Viral Video: இது ‘சைவ’ பூனை; மீனை பார்த்தாலே வாந்தி எடுக்கும் பூனை..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News