Viral Video: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். இப்போது பல சமூக ஊடக தளங்களில் வைரல் ஆகி வரும் ஒரு வீடியோவும் அப்படித்தான் உள்ளது. நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு காட்சியை இந்த வீடியோவில் காண்கிறோம். தாய் எருமை தன் கன்றுக்குட்டியை காப்பாற்றுவதற்காக சிங்கங்களுக்கு எமனாக மாறும் வீடியோ தான் அது.


இணையவாசிகளை பிரமிப்பில் ஆழ்த்திய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சிங்கங்களின் கூட்டத்தைக் கண்டும் அஞ்சாமல் தன் கன்றை காப்பாற்ற எருமை எடுக்கும் அதீத முயற்சியை இந்த வீடியோவில் காண முடிகின்றது.


வீடியோவின் துவக்கத்தில் ஒரு எருமை மாடும் அதன் கன்றுக்குட்டியும் காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருப்பதை காண்கிறோம். அவற்றின் பின்னால் சிங்கக் கூட்டம் வருகின்றது. சிங்கங்கள் எருமையின் கன்றுக்குட்டியை இறையாக்க திட்டமிடுகின்றன. சிங்கங்களின் திட்டத்தை புரிந்து கொண்ட தாய் எருமை தன் குட்டியுடன் வேகமாக நடக்கத் தொடங்குகிறது. அது சிங்கங்களை கண்டு சற்று அச்சத்தில் இருப்பது போலவே தோன்றுகிறது.


ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் காட்சி மாறிவிடுகின்றது. கூட்டத்தில் இருக்கும் சிங்கங்களில் ஒன்று வேகமாக சென்று கன்று குட்டியை பிடித்து விடுகின்றது. அந்த சிங்கம் வேகமாக அதை இழுத்துக் கொண்டு ஓடுகிறது. அப்போது வரை அச்சத்தில் இருந்த தாய் எருமை திடீரென துணிச்சலின் மறு உருவமாக மாறுகிறது. யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத தைரியத்துடன் அது சிங்கத்தை பின்தொடர்ந்து ஓடுகிறது. 


தாய் எருமையின் உறுதியைக் கண்டு சிங்கக் கூட்டத்தில் இருக்கும் சிங்கங்கள் அஞ்சி அங்கும் இங்குமாக ஓடுகின்றன. தன் குட்டியை இழுத்துக் கொண்டு போன சிங்கத்தை பின்தொடரும் தாய் எருமை அதை வெற்றிகரமாக மீட்கிறது. எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் தன் குட்டியை காப்பாற்ற வேண்டும் என்ற உறுதியோடு இருக்கும் ஒரு தாய் எருமைக்கு முன்னால் சிங்கங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தாய் பாசத்தின் ஒரு ஒப்பற்ற உதாரணமாக இந்த வீடியோ விளங்குகிறது.


மேலும் படிக்க | பானிபூரி சாப்பிடவே இனி யோசிப்பீர்கள்... இப்படியா மாவு பிசைவீங்க - ஷாக் வைரல் வீடியோ!


கன்றுக்குட்டியை பிடித்த சிங்கத்துக்கு எமனாய் மாறிய தாய் எருமை: சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ



இந்த வீடியோ சமூக ஊடக தளமான சமூக ஊடக தளமான X -இல் NATURE IS BRUTAL என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 257K வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


' சிங்கங்களின் கூட்டத்திடமிருந்து தன் கன்றுக்குட்டியை காப்பாற்றிய அந்த தாய் எருமையை பார்க்க உடல் சிலிர்க்கிறது. இதுதான் தாயன்பின் உறுதி' என்று ஒரு பயணர் எழுதியுள்ளார். 'அற்புதமான துணிச்சலையும் உள்ளுணர்வையும் அந்த தாய் எருமை வெளிகாட்டி உள்ளது' என்று மற்றொரு பயனர் அதைப் பாராட்டி உள்ளார். 'ஒரு தாய ஆள் தன் குழந்தைக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பதை இந்த வீடியோ காட்டுகின்றது' என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார்.


மேலும் படிக்க | CPR செய்து பாம்புக்கு உயிர் தந்த நபர்: நம்ப முடியாத வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ