Viral Video Latest: இந்தியா போன்று மக்கள் நெருக்கடி மற்றும் மக்கள் தொகை அதிகம் இருக்கும் நாட்டில் உணவு தட்டுப்பாட்டை நிகழாமல் பார்த்துக்கொள்வது எந்தளவிற்கு முக்கியமோ, அந்தளவிற்கு உணவு பாதுகாப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. இது உடல் ஆரோக்கியம் சார்ந்த ஒன்றாகும். தரமற்ற உணவுகளால் பல நேரங்களில் கொடூரமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன.
மோசமான, கலப்படம் நிறைந்த, காலாவதியான உணவுகளை உட்கொள்வதால் உடல் உபாதைகள் ஏற்படும். இதுபோன்ற உணவுப் பொருள்களை விற்கும் கடைகள், உணவகங்களில் சாப்பிட்டு வாந்தி, பேதி ஏற்பட்ட செய்திகளையும் நாம் அதிகம் கடந்து வந்திருப்போம். பெரிய பெரிய கடைகளிலும், உணவகங்களிலும் இதுபோன்ற நிலையே இருக்கின்றன. அதேபோன்று தெருவோர கடைகளிலும் உணவு பாதுகாப்பு என்பது எந்தவிதத்திலும் சமரசம் செய்வதை அனுமதிக்க முடியாது.
அதிர்ச்சியளிக்கும் வைரல் வீடியோ
அந்த வகையில், தற்போது இரு பானிபூரி தயாரிக்கும் நபர்களின் வீடியோ வைரலாகி நெட்டிசன்களை கவலையடைய செய்திருக்கிறது. பானிபூரியை அவர்கள் சுகாதாரமற்ற வகையில் தயாரிப்பதை அந்த வீடியோவில் நீங்கள் காணலாம். வீடியோவில் இருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டு போலீசாரால் கைதும் செய்யப்பட்டுவிட்டனர். அந்த வகையில், இந்த வைரல் வீடியோவின் பின்னணியை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | தாத்தா இது தேவையா? கடுப்பேற்றிய நபர், காண்டான பாம்பு.... வைரல் வீடியோ
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கர்வா பகுதியை சேர்ந்தவர்கள்தான் இந்த இருவரும். சுகாதாரமற்ற வகையில் இரு ஆண்களும் பானிபூரி தயாரிப்பதற்கான மாவில் வெறும் காலில் நின்று மிதிப்பது வீடியோவில் பதிவாகி உள்ளது. அவர்களுக்கு பின் அங்கு தயாரிக்கப்பட்ட பானிபூரி பாக்கெட்டுகளில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. இது விற்கப்பட்டால் நுகர்வோரின் உடல்நலனுக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும் என்ற நிலையில், போலீசார் இந்த இருவரையும் கைது செய்தனர்.
இருவரும் கைது
இந்த வைரல் வீடியோவால் நெட்டிசன்கள் மட்டுமின்றி உள்ளூர் நுகர்வோரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, அந்த உணவு தயாரிப்பாளர்கள் மீது கடும் கோபத்தை வெளிக்காட்டினர். விற்பனையாளர்களை நம்பி கடைகளில் உணவு உண்ணும் நுகர்வோரின் ஆரோக்கியத்தை கெடுக்கும்படி செயல்படுவது ஏற்றுக்கொள்ளவே முடியாதது எனவும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பானிபூரி நாடு நாடு முழுவதும் மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாகும். இதனை தெருவோரங்களில் சாமானிய மக்கள் விற்பதையும், அதனை சாமானியர்கள் உண்பதையும் நாமே பார்த்திருப்போம். தமிழ்நாட்டில் பெரும்பாலும் பிற மாநிலங்களில் இருந்து இங்கு வந்தவர்களே பானிபூரி விற்பனையில் ஈடுபடுவார்கள். வட இந்தியா போன்ற நாட்டின் பிற பகுதிகளிலும் பானிபூரி விற்பனை என்பது கொடிக்கட்டிப் பறக்கும் தொழில் ஆகும். அந்த வகையில் பானிபூரி போன்ற உணவு தயாரிப்பில் சுகாதாரமற்ற முறையை பின்பற்றுவது கண்டிக்கத்தக்கது.
மேலும் படிக்க | CPR செய்து பாம்புக்கு உயிர் தந்த நபர்: நம்ப முடியாத வைரல் வீடியோ
போலீசார் விசாரணை
போலீசார் இந்த இருவரையும் விசாரிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி உள்ளது. அதாவது, அவர்கள் உணவில் தீங்கு விளைவிக்கும் பொருட்களை சுவையை அதிகரிப்பதற்காக பயன்படுத்தியதை விசாரணையில் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீஸ் விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் யூரியா மற்றும் ஹார்பிக் (கழிவறை சுத்தம் செய்யும் திரவம்) ஆகியவற்றை பானிபூரி மாவில் சுவையை மேம்படுத்த சேர்ப்பதாக ஒப்புக்கொண்டார் என தகவல்கள் கூறுகின்றன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அரவிந்த் யாதவ், சில நாட்களுக்கு முன்பு தனது உறவினர்கள் அன்ஷு மற்றும் ராகவேந்திரா ஆகியோருடன் பானிபூரி கடை தொடர்பாக பிரச்னை வந்ததாக கூறினார். அந்த வாக்குவாதத்தை தொடர்ந்து, இருவரும் கால்களால் மாவு பிசைவதை வீடியோவாகப் படம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அவர்களது கடைகளையும் மூடினர்.
கைதான அரவிந்த் யாதவ் (35) மற்றும் சத்தீஸ்குமார் ஸ்ரீவத்சவா (30) ஆகிய இருவருமே உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரிடம் இருந்து ஆட்சேபனைக்குரிய சில பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிய வருகிறது. அவர்களது பெற்றோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, மேற்கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | கரடியின் கச்சிதமான மீன் கேட்ச் வீடியோ வைரல்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ