சமீபகாலமாக இணையத்தில் பூனைகளுக்கும், குழந்தைகளுக்கும் இடையே நிகழும் பாசப்பிணைப்பு காட்சிகள் அதிகமாக பரவி பலரையும் ரசிக்க செய்து வருகிறது.  வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகளும், குழந்தைகளும் சிறந்த நண்பர்களாக இருந்து வருவது வியப்பை ஏற்படுத்துகிறது.  குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் கூட சண்டை போட்டு கொள்கிறது, ஆனால் வீட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகளிடம் பாசமாக விளையாடுகிறது.  தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பூனை ஆசையாக ஒரு மிட்டாயை எடுத்து சென்று அதன் நண்பனான குழந்தைக்கு அந்த மிட்டாயை கொடுக்கும் காட்சியை பலரும் ரசித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பசுவுக்கு அடித்த ஷாக், பாய்ந்துவந்து காப்பாற்றிய நிஜ ஹீரோ: வீடியோ வைரல்


சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த அழகான வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வைரல் வீடியோவில், தரையில் பூனை ஒன்று நடந்து வருவதையும், மேலே மேதையின் மீது ஒரு குழந்தை படுத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.  பின்னர் அந்த பூனை மெதுவாக வாயில் எதையோ கவ்விக்கொண்டு குழந்தையை நோக்கி நடந்து வருகிறது.  அதனைத்தொடர்ந்து ஒரே தாவலில் மெத்தையின் மீது ஏறி குழந்தை அருகே செல்கிறது, குழந்தையின் தலையுடன் தன் தலையையும் வைத்து செல்லமாக இடித்துவிட்டு அந்த மிட்டாயை குழந்தையிடம் கொடுத்துவிட்டு கீழே இறங்கி செல்கிறது.  பின்னர் அந்த குழந்தை பூனை கொடுத்த மிட்டாயை எடுத்து கையில் வைத்திருப்பதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது.


 



இந்த காட்சியை பார்த்த அனைவரும் பூனையின் செயலை கண்டும், பூனை மற்றும் குழந்தைக்கு இடையே உள்ள நட்பையும் எண்ணி வியக்கின்றனர்.  இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் ரசித்து வருகின்றனர்.  இந்த வீடியோவிற்கு நாற்பத்தி மூன்றாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.


மேலும் படிக்க | Monkey Viral Video: படுக்கையில் குரங்கின் உல்லாச செயல்; வைரலாகும் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR