வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாய், பூனை, குரங்கு, பாம்பு ஆகிய விலங்குகளுக்கு இணையத்தில் மவுசு அதிகம். இவற்றின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அவ்வப்போது பகிரப்படுகின்றன. இவை இணையவாசிகளை கவர்ந்து வைரலும் ஆகின்றன.


தற்போதும் அப்படி ஒரு கியூட்டான வீடியோ ஒன்று இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில், பூனை ஒன்று நாய்க்கு மிக அழகாக மசாஜ் செய்வதை காண முடிகின்றது. இது பார்ப்பதற்கு மிக கியூட்டாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. பொதுவாக, நாயும் பூனையும் சண்டை போட்டுக்கொள்ளும் வீடியோக்களையே நாம் பெரும்பாலும் பார்த்துள்ளோம். ஆனால், இந்த வீடியோவில் இரு விலங்குகளுக்கும் இடையில் மிக அன்பான பிணைப்பை காண முடிகின்றது.


விலங்குகளுக்கு இடையிலான தொடர்புகளைக் காட்டும் வீடியோக்கள் எப்போதும் பார்ப்பதற்கு அருமையாக இருக்கும். தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோவும் இப்படித்தான் உள்ளது. மிகவும் பொறுமையாக பூனை நாய்க்கு மசாஜ் செய்வதை பார்க்க ஆசையாக உள்ளது.


மேலும் படிக்க | Viral Video: இந்த ஏரியாவுல இனி உன்னை பார்த்தேன்... காதலிக்காக ஆக்கிரோஷமாக சண்டையிடும் ராஜநாகம்!


அழகான நாய் பூனை மசாஜ் வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோவில் நாய் ஒன்று ஒரு சாலையில் படுத்துக்கொண்டு இருப்பதை காண முடிகின்றது. புசு புசு என இருக்கும் அந்த நாய் மிக கூலாக சாலையில் காணப்படுகின்றது. அதன் அருகில் அமர்ந்திருக்கும் ஒரு பூனை நாயை மெதுவாக வருடி, தடவி அதற்கு அழகாக மசாஜ் செய்கிறது. நாயை பார்த்தால் அந்த மசாஜை நாயும் மிக விரும்பி அனுபவிப்பதாகவே தோன்றுகிறது. இந்த வீடியோ ட்விட்டரில் வெளியாகி மக்களை மகிழ்வித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. 


மேலும் படிக்க | கொஞ்சமும் விவரமில்லாமல் பாம்பிடம் இப்படி செய்யலாமா? நடந்து இதுதான் - வைரல் வீடியோ


இந்த வீடியோவுக்கு "மசாஜ் நேரம்," என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @buitengebieden என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஜூன் 27 அன்று வெளியிடப்பட்டது. இதற்கு 2.7 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


“அடடா! இது மிகவும் அழகாக உள்ளது” என ஒரு பயனர் எழுதியுள்ளார். “இப்படி ஒரு காட்சியை நான் இதற்கு முன்னர் பார்த்தது கிடையாது” என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். “எவ்வளவு அழ்கான நட்பு” என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். ’அந்த பூனையை என்னிடம் அனுப்புங்கள்’ என ஒருவர் வேடிக்கையாக கூறி இருக்கிறார்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | ‘நைசா பேசி போட வெச்சாச்சு ஏசி’: நாயின் மைண்ட் வாய்ஸ்.. அடக்க முடியாம சிரிப்பீங்க: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ