‘நைசா பேசி போட வெச்சாச்சு ஏசி’: நாயின் மைண்ட் வாய்ஸ்.. அடக்க முடியாம சிரிப்பீங்க: வைரல் வீடியோ

Funny Dog Video: ஏசி ஆன் ஆகாமல் அறையில் அமர மறுக்கும் நாய் பற்றியது இந்த வீடியோ. ஏசி -ஐ ஆன் செய்ய நாய் படும் பாட்டையும் வீடியோவில் காண முடிகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 28, 2023, 10:55 AM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் அந்த நாயின் doodle.thebeagle என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் இதய ஈமோஜிகளையும் அளித்து வருகிறார்கள்.
‘நைசா பேசி போட வெச்சாச்சு ஏசி’: நாயின் மைண்ட் வாய்ஸ்.. அடக்க முடியாம சிரிப்பீங்க: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

நாய்கள் மிகவும் விரும்பப்படும் செல்லப்பிராணிகள். நாய்கள் மனிதனின் சிறந்த நண்பர்களாக பார்க்கப்படுகின்றன. வீட்டில் நாய் உள்ளவர்கள் அவற்றையும் வீட்டின் உறுப்பினர்களாகவே பார்க்கிறார்கள். நாய்களும் வீட்டில் உள்ள நபர்களுடன் அளவு கடந்த பாசத்துடன் நடந்துகொள்கின்றன. சமூக ஊடகங்களில் நாய்களின் பல வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன. இவற்றுக்கு இணையவாசிகளிடம் அதிக வரவேற்பும் கிடைக்கின்றன. 

சமீபத்திலும் நாயின் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. இது காண்பதற்கு மிக வேடிக்கையாக உள்ளது. ஏசி ஆன் ஆகாமல் அறையில் அமர மறுக்கும் நாய் பற்றியது இந்த வீடியோ. பீகிள் இனத்தைச் சேர்ந்த இந்த செல்ல நாய்க்கு டூடுல் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏசி -ஐ ஆன் செய்ய நாய் படும் பாட்டையும் வீடியோவில் காண முடிகின்றது.

ஏசி -ஐ ஆன் செய்யாமல் நாய் அந்த அறையில் அமர தயாராக இல்லை என்பதை நாயின் முதலாளியான பெண் புரிந்துகொள்கிறார். அவர் நாயின் அருகில் சென்று, ஏசி -ஐ ஆன் செய்ய வேண்டுமா என அதனிடம் கேட்கிறார். அந்த பெண் நாய்க்கு ஏசி -ஐ ஆன் செய்ய கற்றுக்கொடுக்க முயற்சிக்கிறார். நாய் பின்னர் தன் முதலாளியுடன் சேர்ந்து ஏசி -ஐ ஆன் செய்கிறது. ஏசி ஆன் ஆனவுடன் செல்ல நாய் திருப்தியாக, மகிழ்ச்சியுடன் இருப்பதையும் காண முடிகிறது. டூடுல் தனது மாஸ்டருக்கு ஹை ஃபைவ் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. 

ஏசி போட சொல்லும் புத்துசாலி நாயின் வீடியோவை இங்கே காணலாம்:

ஆச்சரியப்படும் விதமாக, இந்த செல்ல நாய்க்கு சொந்தமாக இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளது. தற்போது வைரலாகும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் அதன் கணக்கிலிருந்தே வெளியிடப்பட்டது. இந்த வீடியோ அனைத்து நாய் பிரியர்களின் கவனத்தையும் ஈர்த்தது. மேலும் இது சமூக ஊடக பயனர்களிடமிருந்து அதிக அன்பை வெற்றிகரமாக சேகரித்துள்ளது.

மேலும் படிக்க | வெறிச்சோடிய சாலையில் திக் திக் காட்சி.. பேயின் வைரல் வீடியோ

பீகிளின் ஆளுமையைப் பொருத்தவரை, இந்த நாய்கள் மகிழ்ச்சியாகவும் பாசமாகவும் இருக்கும். இவை எப்போதும் பலருடன் சேர்ந்து இருக்க விரும்புகின்றன. இவை மிகவும் நட்பாகவும் இருக்கின்றன. இவை சிறந்த குடும்ப செல்லப்பிராணிகளாகவும் கருதப்படுகின்றன. நாய் ஏசி -க்காக ஆசைப்படுகின்றது என்பதை புரிந்துகொண்டு அதன் விருப்பத்தை நிறைவேற்றும் பெண்ணின் செயலின் மூலம், அந்த வீட்டில் உள்ள நபர்கள் அந்த நாயின் மீது வைத்திருக்கும் பாசத்தை அறிந்துகொள்ள முடிகின்றது. மேலும் பெண் நாயின் செல்ல விளையாட்டுத்தனத்தை ஊக்குவிப்பதையும் புரிந்துகொள்ள முடிகின்றது. 

பல சமூக ஊடக பயனர்கள் நாய்களை மனிதர்களுக்கு ஒரு வரம் என்று அழைக்கிறார்கள். இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் அந்த நாயின் doodle.thebeagle என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் இதய ஈமோஜிகளையும் அளித்து வருகிறார்கள். ‘நாய் யாரையும் சார்ந்து இல்லாமல் தன் தேவைக்காக தானே முயற்சிக்கின்றது’ என ஒரு பயனர் கூறியுள்ளார். ‘எங்கள் பூனை கூட இப்படிதான் செய்யும். அது ஏசி -யின் முன் அமர்ந்து யாரேனும் அதை ஆன் செய்யும் வரை அதை உற்று பார்த்துக்கொண்டே இருக்கும்’ என மற்றொரு பயனர் கூறியுள்ளார். 

நெட்டிசன்கள் தங்களையும் தங்கள் செல்லப்பிராணிகளையும் இந்த வீடியோவுடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறார்கள் இது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும், வானிலையைக் கருத்தில் கொண்டு, ஏசியை இயக்க வேண்டும் என்ற நாயின் கோரிக்கை நியாயமானதே என பலர் கூறி வருகிறார்கள். 

மேலும் படிக்க | கொஞ்சமும் விவரமில்லாமல் பாம்பிடம் இப்படி செய்யலாமா? நடந்து இதுதான் - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News