பூனைகள் குறும்புத்தனமானவை, விளையாட்டுத்தனமானவை, மக்களுடன் பழக விரும்புகின்றன. பூனைகள் பொம்மைகளுடன் விளையாடுவதை ரசிக்கின்றன. மேலும், வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அவை வெளியில் செல்லாதவை. இதனால் அடிக்கடி குறும்பத்தனமான வெவ்வேறு செயல்களில் ஈடுபடுகின்றன. அந்தவகையில், சமீபத்தில் பூனை ஒன்று அதன் உரிமையாளருடன் டிவி பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பூனை தொலைக்காட்சிக்கு அருகில் அமர்ந்து கால்பந்து போட்டியை உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வீடியோவின் தனிச்சிறப்பு என்னவென்றால், பூனை தொலைக்காட்சியில் விளையாடிக் கொண்டிருப்பதை உணரமால், அடிக்கும் பந்தை தனது பாதங்களால் படாதுபாடுபட்டு நிறுத்த பலமுறை முயல்கிறது.  இதனால் அறையில் இருந்த உரிமையாளரும் மற்றவர்களும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது, இதற்கு பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.



"வெற்றி பெறும் அணிக்கு இந்த வகையான கோலி தேவை" என்று ஒரு பயனர் கிண்டலாக கருத்து தெரிவித்தார்.  "பூனைக்குட்டி வளர்ந்து அந்த தொலைக்காட்சியைத் தட்டினால் கீழே விழுந்திருந்தால் அங்கிருப்பவர்கள் எல்லாம் சிரித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். அழகான பூனைக்குட்டி, ஆனால் இப்போது பயிற்சி கொடுங்கள " என்று மற்றொரு பயனர் எழுதினார். "அருமை. நான் பூனையின் இந்த கியூட் சுட்டித்தனத்தை மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புகிறேன்!" என மற்றொரு மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்திருக்கிறார். 


மேலும் படிக்க | கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ