இந்த பரபரப்பான சூழலில் இணையத்தில் நாம் காணும் சில சம்பவங்கள் மனதை இதமாக்குவதாய் அமைந்திருக்கிறது.  குழந்தைகளின் குறும்புகள் போல பூனைகளின் குறும்புகளுக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது, அவை எதேச்சையாக செய்யும் செயல்கள் கூட பலரது இதயங்களையும் கொள்ளை கொண்டு விடுகிறது.  இங்கு வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பூனைக்குட்டி ஒன்று கூட்டமாக இருக்கும் பட்டாம்பூச்சியை பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவை பலருக்கும் ரசித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ


சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர் பக்கத்தில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வைரலான வீடியோவில், பூனைக்குட்டி ஒன்று மண் தரையில் ஒரு செடியின் அருகே படுத்துக்கொண்டு இருக்கிறது, அதனருகில் வெண்மை மற்றும் கருப்பு நிறம் கலந்த பட்டாம்பூச்சிகள் கூட்டம் அழகாக நிறைந்துள்ளது.  அந்த பூனைக்குட்டி பட்டாம்பூச்சி கூட்டங்களின் மீது கை வைத்ததும் பட்டாம்பூச்சிகள் பறக்க தொடங்குகிறது, பின்னர் அந்த பூனைக்குட்டி ஓடிச்சென்று மீண்டும் பட்டாம்பூச்சிகளை பிடிக்க தொடங்குகிறது.  இப்படியே அந்த பூனைக்குட்டி பட்டாம்பூச்சிகளுடன் சந்தோஷமாக விளையாண்டு கொண்டு இருக்கிறது.


 



இந்த வீடியோ மன அமைதியை தரும் விதமாகவும், ரசிக்கும்படியாகவும் அமைந்து இருக்கிறது, இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகளும், பல சிறப்பான கமெண்டுகளும் குவிந்து வருகின்றது.


மேலும் படிக்க | மணிக்கணக்கில் ஓடிவந்த சிறுத்தைக்கு காத்திருந்து அல்வா கொடுத்த மான் - வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR