மணிக்கணக்கில் ஓடிவந்த சிறுத்தைக்கு காத்திருந்து அல்வா கொடுத்த மான் - வைரல் வீடியோ

வேட்டையாட மணிக்கணக்கில் ஓடி வந்த சிறுத்தைக்கு மான் ஒன்று காத்திருந்து தப்பித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 15, 2022, 05:44 PM IST
  • மானை வேட்டையாட ஓடி வரும் சிறுத்தை
  • காத்திருக்கும் மான் கடைசியில் எடுத்த ஆயுதம்
  • திகைத்து நின்று வேடிக்கைப்பார்த்த சிறுத்தை
மணிக்கணக்கில் ஓடிவந்த சிறுத்தைக்கு  காத்திருந்து அல்வா கொடுத்த மான் - வைரல் வீடியோ  title=

மான் - சிறுத்தை வீடியோவுக்கு இணையத்தில் எப்போதும் வரவேற்பு இருக்கும். வேட்டையாட வரும் சிறுத்தை, இலக்கு வைத்து தாக்க வந்த மானை தாக்கியதா? இல்லையா? என்பது சுவாரஸ்யமாக இருக்கும். மற்ற விலங்குகள் கூட தாக்க வரும் சிறுத்தை, புலி மற்றும் சிங்கங்களை எதிர்த்து தாக்கும். ஏனென்றால் அவற்றுக்கு போதுமான ஆற்றல் மற்றும் உடல் வலிமை இருக்கும். உதாரணமாக ஒரு சிறுத்தை அல்லது சிங்கம் உணவுக்காக காட்டெருமையை வேட்டையாடுகிறது என்றால், அவை தங்களால் இயன்றளவு தாக்க வரும் விலங்கிடம் சண்டைபோடும்.

மேலும் படிக்க | எல்லை தாண்டிய நட்பு வீடியோ வைரல்: புலிகளுடன் நட்பு பாராட்டும் செல்ல நாய்க்குட்டி

ஆனால், மானைப் பொறுத்தவரை அப்படி செய்யமுடியாது. அதற்கு உடல் வலிமை இல்லை. ஆபத்து வரும்போதெல்லாம் அவற்றில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் இரண்டு விஷயங்களை ஒரே சேர செய்தால் மட்டுமே முடியும். ஒன்று வேகமாக ஓட வேண்டும். வேகமாக ஓடினால் கூட சிறுத்தை அதனைவிட வேகமாக ஓடி வந்து தாக்கி வேட்டையாவிடும். அதனால், சமயோசித்த புத்தியையும் மான் கடைபிடிக்க வேண்டியிருக்கும். இரண்டையும் ஒரே நேரத்தில் கடைபிடிக்கும்போது மட்டுமே மான், தாக்க வரும் சிறுத்தையிடம் இருந்து தப்பிக்க முடியும். அப்படி இரண்டையும் ஒரே நேரத்தில் செய்து மான் ஒன்று சிறுத்தையிடம் இருந்து தப்பிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இணையத்தில் வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில் கூட்டமாக தொலைவில் சிறுத்தைக் கூட்டம் ஒன்று அமர்ந்திருக்கிறது. அதற்கும் சற்று தொலைவில் மான் படுத்திருக்கிறது. மானை வேட்டையாட வேட்டையாட வேண்டும் என வரும் சிறுத்தை, கமுக்கமாக நீண்ட தொலைவில் இருந்து ஓடி வருகிறது. இது மானுக்கு தெரியவில்லை. அப்படி தான் நாமும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சிறுத்தை மிக அருகில் வந்தவுடன் சுதாரித்துக் கொள்ளும் மான், சமயோசித்தமாக யோசித்து வேகமாக பாய்ந்தோடுகிறது. இந்த பாய்ச்சலை எதிர்பார்க்காத சிறுத்தை, ஸ்தம்பித்து நிற்கிறது. கடைசியில் இலக்கில் இருந்து தப்பித்த மான் மகிழ்ச்சியாக ஓட, வேட்டையாட வந்த சிறுத்தை சோகமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. பதிவிடப்பட்ட இந்த வீடியோ சிறிது நேரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | மாலை போட்ட யானை: அதிர்ச்சியில் மணமக்கள், குழப்பத்தில் விருந்தினர், வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News