வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பதை பலர் விரும்புகின்றனர். அப்படி வளர்த்தால் வீட்டுக்கு பாதுகாப்பு மட்டுமின்றி வீட்டில் புது உறவோடு இருப்பது போன்ற எண்ணம் உருவாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் பலர் நாய், பூனை கிளி உள்ளிட்டவைகளை செல்ல பிராணிகளாக வளர்க்கின்றனர். ஒரு சில வீடுகளில் பல பிராணிகளை செல்லமாக வளர்ப்பதும் நிகழும். அப்படி வளர்ப்பவர்கள் வீட்டில் குழந்தை ஒன்று இருந்தால் அந்த வீட்டில் கலகலப்புக்கும், பல ஆச்சரியமான செயல்களுக்கும் பஞ்சம் இருக்காது.


வீட்டில் இருக்கும் பெரியவர்களோடு பிராணிகள் ஒட்டிக்கொள்கின்றனவோ இல்லை வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளிடம் எந்தவித தயக்கமுமின்றி உடனே ஒட்டிக்கொள்ளும் சுபாவம் உடையவை விலங்குகள்.


மேலும் படிக்க | Pic Puzzle: மரத்தில் ஒளிந்திருக்கும் பறவையை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்


குழந்தைகள் அழுதால் சமாதானம் செய்வது, அந்தக் குழந்தைகளுக்கு தேவையான வேலையை செய்வது, குழந்தைகளுடன் விளையாடுவது என வீட்டில் இருப்பவர்களை விலங்குகள் எப்போதும் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கும். 


அப்படிப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி வெளியாவது வழக்கம். அந்தவகையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. 


அந்த வீடியோவில் குழந்தை ஒன்று பலூனை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறது. அந்த பலூன் சற்று உயரமாக பறந்துவிட குழந்தை செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. 


 



இதனைப் பார்த்த அருகில் இருந்த பூனை உடனடியாக டைனிங் டேபிளுக்கு மேலே ஏறி பலூனின் நூலை தனது முன்னங்கால்களால் பற்றி பலூனை கீழே எடுத்து வந்து குழந்தையிடம் ஒப்படைக்கிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் பூனையின் செயலை பாராட்டியும், ஆச்சரியப்பட்டும் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


மேலும் படிக்க | Viral Video: முட்டைகளை திருட நினைத்த சிறுமியை போட்டுத் தாக்கிய மயில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR