Viral Video: முட்டைகளை திருட நினைத்த சிறுமியை போட்டுத் தாக்கிய மயில்

Viral video of Peahen: முட்டைகளை திருட நினைத்த சிறுமிக்கு பாடம் புகட்டிய மயிலின் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 26, 2022, 06:05 PM IST
Viral Video: முட்டைகளை திருட நினைத்த சிறுமியை போட்டுத் தாக்கிய மயில் title=

வைரல் வீடியோ: தாய் தன் குழந்தைக்காக உயிரை கொடுக்க முடியும், உயிரை எடுக்கவும் முடியும். இந்த உலகில் தாயின் அன்புக்கு ஈடு இணை கிடையாது. ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாக்க தன் உயிரைப் பணயம் வைக்கத் தயாராக இருக்கிறாள். 

தாயின் இந்த பண்பு மனிதர்களுக்கு மட்டும் அல்ல விலங்குகளுக்கும் பொருந்தும் . சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் தாய் மயில் வீடியோ  இதற்கு சான்றாகும். இதில், தாய் மயில் தான் ஏன்ற முட்டையை காப்பாற்ற என்ன செய்கிறாள் என்பதைப் பார்த்து உங்கள் வியப்பு ஏற்படும்.

மயில் முட்டைகளை திருட முயலும் சிறுமி

ஒரு சிறுமி மயிலின் முட்டைகளை திருட முயல்வதை வைரல் வீடியோவில் காணலாம். இதற்குப் பிறகு, அந்த பெண்ணுக்கு நேர்ந்த கதியை பார்த்தால், உங்களுக்கு வியப்பு மேலிடும். தாய் மயில் அந்தப் பெண்ணுக்கு நல்ல பாடம் கற்பிப்பதை நீங்கள் பார்க்கலாம். இந்தப் பாடத்தை அந்தப் பெண் தன் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. மயில் தனது முட்டைகளின் மேல் அமர்ந்து கொண்டு அடை காப்பதை வீடியோவில் காணலாம். இதற்கிடையில், ஒரு பெண் அங்கு வந்து மயிலை பிடித்து பக்கவாட்டில் முன்னோக்கி வீசுகிறாள். 

வைரலான வீடியோவை கீழே காணலாம்:

 

மேலும் படிக்க | Viral Video: இரு தலைப்பாம்பிடம் சிக்கிய எலி; மனம் பதறச் செய்யும் கொடூர வீடியோ

மயிலை முன்னோக்கி வீசிய பின் தரையில் சிதறி கிடக்கும் முட்டைகளை திருட முயல்வதையும் வீடியோவில் காணலாம். மறுபுறம், மயில் பறந்து வந்து அந்தப் பெண்ணின் மீது பாய்கிறது. அந்த சிறுமி கீழே விழும் விதத்தை பார்த்தால், மயில் எவ்வளவு வலுவாக தாக்கியது என்பதை அறிந்து கொள்ளலாம். இனி அந்த சிறுமி தவறுதலாக கூட இதைச் செய்ய முயற்சிக்க மாட்டார். இந்த வீடியோ @issawooo என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News