கோபம் வந்தா கூரை ஏறனுமா? கீழே வந்திரு ராசா என காதல் எருமையை கீழே அழைக்குதோ மாடு?
Catwalking Cow On Roof Top: கோபத்தில் ஏ எருமை மாடு என்ன செய்யறே என்று திட்டு வாங்கினால் கோபம் வரும் தானே? ஆனா இந்த வீடியோவைப் பார்த்தால் கோபம் போயிடும்
Viral Cow Video: சமூக ஊடகங்கள் இன்று வாழ்க்கையின் முக்கிய பங்கு வகிக்கும் காலம் இது. நாம் பார்க்கவே முடியாத விஷயங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் வீடியோக்கள் வைரலாகின்றன. விலங்குகளின் வீடியோக்கள் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன. அந்த ரசனைக்குரிய வீடியோக்கள் அனைவரையும் நெகிழ வைக்கின்றன.
சமூக ஊடகங்களில் வீடியோ
இணையத்தில் பதிவேற்றப்படும் வீடியோக்களில், வித்தியாசமான அலல்து அச்சம் கொடுக்கும் வீடியோக்கள் அதிகம் பகிரப்படுகின்றன. வைரல் வீடியோக்கள் என்ற அந்தஸ்தைப் பெறும் வீடியோக்களில் ஏதாவது ஒரு வித்தியாசம் இருக்கும். இயல்பான வைரல் வீடியோக்களே லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளும்போது, வித்தியாசமான வீடியோக்களுக்கு சொல்லவும் வேண்டுமா?
மேலும் படிக்க | பூனையுடன் விளையாடும் பாம்பு: வைரலாகும் பூனையின் மாஸ் ரியாக்ஷன்
வித்தியாசமான வீடியோக்கள் என்றால், அவை விலங்குகளின் மோதல், காதல், பாம்பு, சிங்கம் என நாம் பார்க்கவே முடியாத வீடியோக்கள் மட்டும் தான் சமூக ஊடகங்களில் வைரலாகுமா? இல்லை என நிரூபிக்கிறது சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகும் ஒரு வாக்கிங் வீடியோ.
வாக்கிங் வீடியோ என்றால் சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். மொட்டை மாடியில் நீங்களும் நானும் வாக்கிங் போகலாம். ஆனால், மாடு மொட்டை மாடியில் நடந்து போனால் லெப்படி இருக்கும்?
ஆச்சரியமான இந்த வீடியோவை பலரும் ரசித்து பார்க்கின்றனர்.
த வீடியோவைப் பார்த்தால் அந்தக்கால நினைவுகள் மனதில் வந்து நெகிழ வைக்கின்றன.
மேலும் படிக்க | பாம்புக்கு பால் வைக்கலாம்! தண்ணி வச்சா என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்?
இந்த வீடியோவை பலரும் ரசித்துப் பார்க்கின்றனர். வைரலாகும் வீடியோவில் நடைபயிலும் மாடு, எப்படி கூரையில் ஏறியது என்று தெரியவில்லை. சாதாரண தரையில் நடப்பதற்கும் உயரமான கூரையில் நடப்பதற்கும் வித்தியாசம் உண்டே?
சரி, மேலே மேய்ச்சல் நிலம் இருக்கும் என்றா மாடு கூரைக்கு போயிருக்கும்? என்ன காரணத்திற்காக மாடு, கூரையில் ஏறியது என்று அனைவரும் தங்கள் மேல்மாடி சூடேற யோசித்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் திரும்பத்திரும்ப இந்த வீடியோவை பார்ப்பதால், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் ‘என்ன வாக்கிங் இது?’ என்ற கேள்வியுடன் வைரலாகிறது.
மேலும் படிக்க | இந்த கலர்ல மலைப்பாம்பா? சிறுமியிடம்....பதற வைக்கும் வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ