சீனாவின் பிரபல சமையல் கலைஞர் வாங் காங்; தனது சமையல் நிகழ்ச்சியின் போது அரிய வகை (Salamander) பல்லியை கத்தியால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவை சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் வாங் காங். 29-வயது ஆகும் வாங் காங் கடந்த 2017-ஆம் ஆண்டு துவங்கி தனது யூடியூப் சேனலின் மூலம் சமையல் கலையினை தனது ரசிகர்களுக்கு பயிற்றுவித்து வருகின்றார். அந்த வகையில் அடிக்கடி புதவித உணவு வகைகளை அடிக்கடி ஆன்லைனில் சமைத்து காண்பிப்பதை வாங் காங் வழக்கமாக கொண்டுவந்துள்ளார்.


இந்நிலையில் சமீபத்தில் தனது புதவித சமையலுக்காக அரிய வகை (Salamander) பல்லியை கொன்று அதனை குழம்பாக சமைத்துள்ளார். சுமார் 4 நிமிடம் பதிவாகியுள்ள இந்த வீடியோவில் சமையல் செய்யும் முன்னதாக இந்த Salamander பல்லியை கத்தியால் வெட்டி கொன்றுள்ளார் வாங் காங். 



இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, அவரது ரசிகர்கள் வாங் காங்-கை கடுமையாக சாடியுள்ளனர். சிலர் அரிய வகை பல்லியை அனைவரது கண்பார்வைக்கு முன் கொன்றது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளனர். சிலர் உண்பதற்கு தகாத உயிரினத்தை கொன்று உணவு பரிமாறுவது ஏற்புடையது அல்ல எனவும் தங்களது யூடியூபில் கமெண்ட்களாக பதிவு செய்துள்ளனர்.


இதனையடுத்து வாங் காங் மண்ணிப்பு கோரும் விதமாக, தான் சமைத்த பல்லி சமையலுக்காக வளர்க்கப்பட்டது எனவும், காட்டில் இருந்து பிடிப்பட்டது இல்லை எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வீடியோவில் தான் கொலை செய்த பல்லி, கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தால் காண்பிக்கப்பட்டது எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.