வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் யானை, புலி, குரங்கு, நாய் என இந்த விலங்குகளுக்கு மவுசு அதிகம். இவற்றின் வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டு பார்க்கப்படுகின்றன. அதுவும் குரங்கின் குறும்புத்தனத்தை பயனர்கள் விரும்பி பார்க்கிறார்கள். அப்படி ஒரு குறும்பு குரங்கையே அடக்கிய சிறுவனின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 


குரங்குகள் மற்றும் குழந்தைகளின் குறும்புத்தனம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். குறும்புச் செயல்களைச் செய்து மக்களை மகிழ்விப்பதில் குழந்தைகளும் குரங்குகளும் சளைத்தவர்கள் இல்லை. தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், இதே போன்ற ஒரு காட்சியை காண முடிகின்றது. காடு போல காட்சியளிக்கும் ஒரு பகுதியில், ஒரு குரங்குக்கும் ஒரு சிறுவனுக்கும் இடையே நடக்கும் சண்டையை வீடியோவில் காண முடிகின்றது.


மேலும் படிக்க | ‘ஏய் வா விளையாடலாம்’: வம்பிழுக்கும் குரங்கு, அரவணைக்கும் புலி, செம கியூட் வைரல் வீடியோ 


இருவரும் மிகவும் கோபமாக ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதாகவும் தெரிகிறது. குரங்கு சிறுவனின் தலைமுடியை பிடித்து இழுக்கிறது. சிறுவனும் அதற்கு தக்க பதிலடி கொடுக்கிறான். 


தன்னை தாக்கும் குரங்கை சிறுவன் முழு பலம் கொண்டு தாக்குகிறான். குரங்கும் விடுவதாக இல்லை. அதுவும் இரு கைகளையும் கொண்டு பலமாக தாக்குகிறது. எனினும், இறுதியில் சிறுவனே வெற்றி பெறுகிறான். அந்த சிறுவனின் முகத்தில் அச்சம் என்ற ஒன்றையே காண முடியவில்லை என்பது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும்.


நெஞ்சை பதற வைக்கும் வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வேடிக்கையான வீடியோ '1m_viral_reels' என்ற இன்ஸ்டாகிராம் கணக்கால் பகிரப்பட்டது. இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


'இந்த சண்டை அந்த சிறுவனுக்கு ஆபத்தாக முடிந்திருக்கலாம்' என ஒரு பயனர் தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். 'மிகவும் துணிவான சிறுவன்..முகத்தில் அச்சத்தையே காண முடியவில்லை' என மற்றொரு பயனர் அந்த சிறுவனை பாராட்டியுள்ளார். 


மேலும் படிக்க | எடுத்தேன் பாரு ஓட்டம்...நபரை ஓடவிட்ட காட்டு யானை: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ