‘ஏய் வா விளையாடலாம்’: வம்பிழுக்கும் குரங்கு, அரவணைக்கும் புலி, செம கியூட் வைரல் வீடியோ

Funny Monkey Tiger Video: இப்படி ஒரு பாசமா என வியக்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. குரங்கு குட்டிக்கும் புலி குட்டிக்கும் இடையில் இருக்கும் பிணைப்பு நெட்டிசன்களை இளக வைத்துள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 5, 2022, 12:19 PM IST
  • நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், உங்கள் மன அழுத்தத்துக்கு மருந்தாகும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
  • இதைப் பார்த்தால் உங்களால் புன்னகைக்காமல் இருக்க முடியாது.
  • புலி குட்டியுடன் கொஞ்சி விளையாடும் குரங்கு குட்டியின் அழகான வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.
‘ஏய் வா விளையாடலாம்’: வம்பிழுக்கும் குரங்கு, அரவணைக்கும் புலி, செம கியூட் வைரல் வீடியோ title=

வைரல் வீடியொ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

அலுவலக பணி காரணமாகவோ அல்லது தனிப்பட்ட விஷயங்கள் காரணமாகவோ நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், உங்கள் மன அழுத்தத்துக்கு மருந்தாகும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. இதைப் பார்த்தால் உங்களால் புன்னகைக்காமல் இருக்க முடியாது. புலி குட்டியுடன் கொஞ்சி விளையாடும் குரங்கு குட்டியின் அழகான வீடியோ ஒன்று இணையத்தில் வலம் வருகிறது. 

குரங்கு குட்டிக்கும் புலி குட்டிக்கும் இடையில் நடக்கும் சில கியூட்டான விஷயங்களை இந்த வீடியோவில் காண முடிகின்றது. நிம்மதியாக படுத்துக்கொண்டிருகும் புலி குட்டியை குரங்கு குட்டி ஒன்று சீண்டுவதையும், அதனை தன்னுடன் வந்து விளையாட அழைப்பதையும், அதனுடன் கொஞ்சி குலாவுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. புலி குட்டியும் குரங்கை ஆசையாக அரவணைத்து விளையாடுவதைக் காண முடிகின்றது. குட்டி குரங்கும், புலி குட்டியும் பகிர்ந்து கொள்ளும் இந்த சிறப்பு பிணைப்பை பார்த்த நெட்டிசன்களால் இதை நம்ப முடியவில்லை. 

இணையவாசிகளை சுண்டி இழுத்த அந்த வீடியோவை இங்கே காணலாம்:

மேலும் படிக்க | கல்யாணத்துக்கு பஸ் புக் பண்ணு பாத்திருப்பீங்க ஆனா....Flight-ட்டு...வீடியோ வைரல் 

புலிகள் பொதுவாக மிகவும் ஆக்ரோஷமான விலங்குகளாக கருதப்படுகின்றன. ஆனால், இந்த வீடியோவில், குரங்குடன் புலி மிகவும் இயல்பான ஒரு தோழமையுடன் நடந்துகொள்கிறது. இந்த வீடியோ காண்பவர்களின் இதயங்களை கண்டிப்பாக உருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வீடியோவின் தலைப்பில் "இரண்டு குழந்தைகள்" என எழுதப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் @tigers_videos என்ற பயனர் பகிர்ந்துள்ளார். நவம்பர் 17 அன்று பகிரப்பட்ட இந்த வீடியோ 25,000-க்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. மேலும், இதற்கு 2,300-க்கும் மேலான லைக்குகள் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

"இது இதுவரை பார்த்திராத ஒரு அற்புதமான காட்சி. இது மிகவும் அழகாக இருக்கிறது" என்று ஒரு பயனர் எழுதியுள்ளார். மற்றொரு பயனர், "என்னால இதை மீண்டும் மீண்டும் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அந்த அரவணைப்பை என் இதயத்தில் உணர்ந்தேன்..!" என கருத்து தெரிவித்துள்ளார். "நான் அங்கு இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. அந்த காட்சியை என் கண்களால் பார்க்க ஆசைப்படுகிறேன்” என மற்றொரு பயனர் கூறியுள்ளார். 

மேலும் படிக்க | அவசர பட்டுட்டியே பங்கு...நபரை கடிக்க ஆசைப்பட்ட பாம்புக்கு பல்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News