புலிக்குட்டிக்கு புட்டிபால் கொடுக்கும் தாய் குரங்கின் வீடியோ காண்போரின் மனதை நெகிழ வைக்கிறது. ஆச்சரியத்துக்கும், வியப்புக்கும் பஞ்சமில்லாதது இந்த உலகு. பிறப்பு இறப்பைக் கடந்து நம்மை வழிநடத்திச் செல்வது அன்பு தான். வெறுப்பின் பாதையில் செல்பவர்களும்கூட இறுதியில் கரைசேர தேடும் இடமாக இருக்கிறது அன்பு. அந்த அன்பு விலைமதிப்பிலாதது. அமைதியையும், நிம்மதியும் கொடுக்கக்கூடியது. அத்தகைய அன்பு யாரிடம் இருந்து கிடைத்தால் என்ன? அந்த அரவணைப்பு எங்கிருந்து வந்தால் என்ன? கிடைக்கும்போது அனுபவித்துக் கொள்ள வேண்டியது தான். மேலும், அங்கிருந்து பெற்ற அன்பை பிறரிடம் கொடுக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பெண்ணை குறும்பாக சீண்டும் குரங்கு வீடியோ: துச்சாதனனின் மறுபிறவியோ


மனிதர்களிடம் கற்றுக் கொள்ள முடியாத விஷயங்களைக் கூட விலங்குகள் நமக்கு சட்டென உணர்த்திவிடும். விலங்குகள் என்றாலே மிருகத்தனத்துக்கு அடையாளமாக காட்டுப்படும் இந்த உலகில் அவற்றின் அன்பு பக்கத்தை பலரும் பெரியளவில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், உண்மையில் விலங்குகள் மிகவும் அன்பானவை. ஒன்றின் மீது ஒன்று அளவு கடந்த அன்பை செலுத்தக் கூடியவை. இந்த வீடியோவை நீங்கள் பார்த்தால் புரியும்.



தாயில்லா புலிக்குட்டி ஒன்றுக்கு, தாய் குரங்கு நன்றாக கவனித்து பால் கொடுக்கிறது. அதனுடன் கொஞ்சி விளையாடுகிறது. கணநேரமும் தன் குழந்தைபோல் பத்திரமாக பார்த்துக் கொள்கிறது. அன்பை பறைசாற்றும் இந்த அழகான வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் கவனத்தையும் பெற்றுள்ளது. டிவிட்டரில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. வீடியோவை பார்த்து ரசித்த பலரும் கமெண்டில் குரங்கின் அன்பையும், புலிக்குட்டியின் அழகையும் வார்த்தைகளால் வடித்துள்ளனர். அவற்றின் அன்பு நெகிழ வைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.  


மேலும் படிக்க | மணமகளின் தங்கைக்கு மாலை போட்ட மாப்பிள்ளை: ஷாக் ஆன மணமகளின் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR